விஜயவாடா : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. பட ரிலீசை முன்னிட்டு ராம் சரணுக்காக படக்குழு செய்துள்ள காரியம் இந்திய அளவில் புதிய சாதனையே படைத்துள்ளது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் கேம் சேஞ்சர். இந்த படம் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷங்கர் தெலுங்கில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்திற்கு டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரூ.450 கோடி பட்ஜெட்டில், தமன் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு விஜயவாடாவில் படத்தின் ஹீரோ ராம் சரணுக்கு 256 உயரத்திற்கு மெகா கட்அவுட் வைத்துள்ளார்கள் படக்குழுவினர். இன்றைய தேதியில் இந்தியாவின் மிக உயரமான கட்அவுட் இது தானாம். இந்த கட்அவுட்டை தயாரிப்பாளர் தில் ராஜூ திறந்து வைத்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த ஹீரோவிற்கும் இவ்வளவு உயரமாக கட்அவுட் வைத்தது கிடையாது. இந்த கட்அவுட் திறப்பு விழாவில் ராம் சரணின் ரசிகர்கள் பலரும் வந்திருந்தனர்.
இந்த மெகா கட்அவுட்டை காணவும், இதை போட்டோ எடுப்பதற்காகவும் ஏராளமான ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த படம் வெற்றி அடைய பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் இந்த மெகா கட்அவுட் தொடர்பான போட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. இது கட்அவுட்டின் உயரம் கிடையாது, ராம் சரண் மீது தாங்கள் வைத்துள்ள அன்பின் அடையாளம் என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
வழக்கமாக டைரக்டர் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் இருக்கும். ஆனால் கேம் சேஞ்சர் படத்திற்கு படம் ரிலீசாவதற்கு முன்பு கட்அவுட்டிலேயே பிரம்மாண்டத்தை காட்ட துவங்கி விட்டார்கள். ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் பல சர்ச்சைகளும் குவிந்து கொண்டிருக்கும் சமயத்தில் மற்றொரு புறம் கொண்டாட்டங்களும் களைகட்ட துவங்கி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}