வாஷிங்டன்: பூமியை நோக்கி அபோபிஸ் என்ற விண்கல் வேகமாக நகர்ந்து வருகிறது. இது பூமியை தாக்கவும் வாய்ப்புண்டு என நாசா தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் விண்கற்களால் ஆபத்து அதிகம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல விண்கற்கள் இருந்தாலும், ஒரு சில விண்கற்களால் மட்டுமே பூமிக்கு ஆபத்து அதிகம். இந்த நிலையில் அபோபிஸ் எனும் விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் கடந்த 2004ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. அபோபிஸ் விண்கல் 2029ம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால் இது பூமியை தாக்கும் என்றும் ஒரு சில நேரங்களில் தாக்காமலும் செல்ல வாய்ப்பு உள்ளதாக நாசா கணித்துள்ளது. இது பூமியை தாக்கினால் 3 கிலோ மீட்டர் ஆழத்தில், 10 கிலோ மீட்டர் அகலத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்படும்.
இந்த கல் விழுந்த இடத்தில் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த கல் விழும் 320 கிலோமீட்டர் பரப்பளவிற்கு எந்த கட்டிடமும் இருக்க வாய்ப்பில்லையாம். எல்லாம் காலியாகி விடுமாம். விண்கல் விழுந்த இடத்தில் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பார்கள் என்றும், கோடிக்கணக்கான மக்கள் படுகாயம் அடைவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதனால் பல நாடுகளில் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்ககூடும், இது உலக அளவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அந்த விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்ற நம்பிக்கையையும் நாசா வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}