இன்று அட்சயதிரிதியை.. தங்கம் விலை சர்ருன்னு குறைஞ்சிருச்சு தேவி!

Apr 22, 2023,11:26 AM IST
சென்னை : இன்று அட்சய திரிதியை நாள் என்பதால் தங்கம் வாங்குவதற்காக நகைக்கடைகளில் மக்கள் கூடி உள்ளனர். இந்த சமயத்தில் மக்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதமாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கி வீட்டில் சேமித்து வைத்தால், தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். செல்வ வளம் பெரும் என்பது நம்பிக்கை. ஆனால் அட்சய திரிதியை நாளில் எந்த காரியத்தை செய்தாலும் அதன் பலன் பல மடங்காக பெருகும். இது தெரியாமல் பலரும் கடன் வாங்கியாவது இந்த நாளில் தங்கம் வாங்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த நாளில் கடனை அடைக்கலாமே தவிர, கடன் வாங்கினால் கடனும் பெருகிக் கொண்டே போகும்.




அட்சய திரிதியை நாள் என்பதால் தங்கம் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் இன்று நகைக்கடைகளில் குவிந்துள்ளனர். ரம்ஜான் விடுமுறை என்பதால் நகைக்கடைகளுக்கு வழக்கமான அட்சய திரிதியை நாட்களில் வரும் கூட்டத்தை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே காணப்படுவதாக நகைக்கைடக்காரர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நகைக்கடைகளுக்கு வந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

வழக்கமாக அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை உயரத்தான் செய்யும். இருந்தாலும் சென்டிமென்ட் காரணமாக மக்கள் தங்கம் வாங்குவதால் ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விற்பனை அதிகரித்து வருகிறது. தங்கம் விற்பனை அதிகரிப்பதால் வழக்கமாக நகைக்கடைக்காரர்கள் தான் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தங்கம் வாங்கும் மக்களும் மகிழ்ச்சியடையும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து, ரூ.5605 ஆக உள்ளது. இதனால் மக்கள் செம குஷியாக நகையை வாங்கி செல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்