சென்னை: தங்கம் விலையில் சற்று சரிவு காணப்படுகிறது.
தங்கம் ஒரு சிறந்த முதலீடு. விலை குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு தங்க நகையை வாங்கிப் போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அது அருமையான முதலீடு என்பதால்தான் விலை குறையும்போது நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் மக்கள்.

இருப்பினும் தங்கம் விலையானது நிலையாகவே இருப்பதில்லை. சில நாட்கள் தொடர்ந்து உயரும். பல நாட்கள் தொடர்ந்து சரியும். இப்படித்தான் அது நிலையில்லாமல் இருக்கும். இப்போதும் கூட தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இடையில் திடீரென உயர்ந்தது. ஏதாச்சும் வாங்கலாம் என்று மக்கள் நினைக்கும் போது அது உயர்ந்து விடும்.
நேற்று ஏற்றத்தில் இருந்த தங்கம் இன்று சரிவில் உள்ளது. அடுத்துள்ள நாட்களில் விசேச நாட்கள் அதிகம் இருப்பதால் தங்கத்தின் விலை உயர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கு வாடிக்கையாளர்கள் சற்றும் தாமதிக்காமல் சீக்கிரம் சென்று தங்கத்தை வாங்கி விடுங்கள்.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5410 ரூபாயாகும். இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43280ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5900 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 7 ரூபாய் மட்டுமே குறைவாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 47200 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில்,ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையிலேயே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}