சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது, ஒரு பவுன் தங்கம் ரூ.51,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.89.50க்கு விற்பனையாகிறது.
கடந்த சனிக்கிழமையன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.3160 குறைந்திருந்தது.
ந்நிலையில், கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் இன்று ரூ.400 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50 அதிகரித்து 6,415 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,41,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,998 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,984 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.69,980 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.6,99,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,916க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,931க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,916க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,916க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்த வெள்ளி இன்று உயர்ந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு 0.50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 716 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.895 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,950 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.89.500 ஆக உள்ளது.
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}