சென்னை: பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி அதிரடியாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 மணி நேரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது தங்கம் விலை. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ரூ.52,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிலோவிற்கு ரூ.3500 குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்து, வாடிக்கையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததுடன் புதிய உச்சத்தையும் தொட்டது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மத்திய அரசின் சுங்க வரியும் முக்கிய காரணமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சுங்கவரியை மத்திய அரசு குறைந்ததினால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகத்திற்கான சுங்க வரி 15 சதவீதமாக இருந்து வந்ததால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது சுங்க வரியை 6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.6810க்கு வற்கப்பட்டது.பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் கிராமிற்கு ரூ.275 குறைந்து ரூ.6,550 க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய மாலை நேர தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,550 ரூபாயாக உள்ளது. இது காலையில் இருந்த விலையில் இருந்து 275 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.2,200 ஆக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 52,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.65,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,55,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,146 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,168 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.71,460 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,14,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,086க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,510க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,101க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,358க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,086க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை நேரம் படி ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 40 காசுகள் குறைந்து ரூ.95.60க்கு விற்கப்பட்டது. அது தற்போதைய மாலை நேர நிலவரப்படி ரூ.3.50 காசுகள் குறைந்து ரூ.92.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 740 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.925 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,250 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.92.500 ஆக உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்