"ஏழரை"யைக் கூட்டிய கோல்ட்மேன் சாக்ஸ்.. கான்பரன்ஸ் ஹாலில் வைத்து.. 3000 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

Jan 20, 2023,11:24 AM IST
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் 3000 பேரை மீட்டிங் என்று கூறி கூப்பிட்டு வேலை நீக்கம் செய்து அனுப்பிய செயல் பலரையும் அதிர வைத்துள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம்தான் கோல்ட்மேன்சாக்ஸ். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபடுவது  போல கோல்ட்மேன்சாக்ஸ் நிறுவனமும் இறங்கியுள்ளது. ஆனால் 3000 ஊழியர்களை இந்த நிறுவனம் நீக்கிய விதம் பலரையும் கோபமடைய வைத்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிஇஓ டேவிட் சாலமோனுடன் மீட்டிங் உள்ளது. அனைவரும் கான்பரன்ஸ் ஹாலில் காலை 7.30க்கு கூடுங்கள் என்று கூறி மெயில் அனுப்பியுள்ளனர். இதையடுத்து  ஊழியர்கள் அனைவரும் கரெக்டாக அந்த நேரத்திற்கு வந்து விட்டனர்.. அதன் பிறகுதான் தெரிந்திருக்கிறது.. "ஏழரை" காத்திருக்கிறது என்று.

கூடிய ஊழியர்களிடம், மன்னிக்கவும், சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. உங்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம். வேறு வேலையில் சேர்ந்து சந்தோஷமாக இருங்கள். இப்போது போகலாம் என்று கூறி அதிர வைத்து விட்டனர் நிறுவனத்தினர்.

மீட்டிங் என்று போன ஊழியர்கள் மீண்டும் தங்களது இருக்கைகளுக்கு வராததால் மற்ற ஊழியர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் பின்னர்தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, அவர்களது சகாக்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்ட விவரம். இப்படியா காலங்கார்த்தால மீட்டிங் என்று கூப்பிட்டு வேலையை விட்டு நீக்குவது என்று சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்