சென்னை: நடிகர் மைக் மோகனின் ரீ-என்ட்ரி படம் ஹரா. பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.
ஹரா திரைப்படத்தில் யோகி பாபு, பவுடர் நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஹரா திரைப்படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து பண்டிகை வெளியீட்டுக்கு தயாராகிறது ஹரா திரைப்படம்.

ஹரா திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்து ஏற்பட்டது. அதில், படுகாயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதன் காரணமாக, ஹரா படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. படப்பிடிப்புக்கு தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் இயக்குனர் பேசுகையில், கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ஹரா வெளியாகும் என்று கூறினார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}