எந்தெந்த உணவுகளில் புரதச் சத்துக்கள் அதிகம் இருக்கு.. தெரியுமா உங்களுக்கு?.. முதல்ல.. இதை படிங்க!

Jun 25, 2024,06:22 PM IST

ஒரு வீடு கட்டுவதற்கு செங்கல், சிமெண்ட், மணல், போன்ற கட்டுமான பொருட்கள் அவசியம். இதில் எது குறைந்தாலும் வீடு கட்ட முடியாது.. ஒரு வீடு கட்ட சிமெண்ட் மிகவும் அத்தியாவசியமானது. ஏனெனில் மணல் செங்கல் முதலியவற்றை இணைக்க சிமெண்ட் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தையும் நாம் ஒன்றிணைத்து பயன்படுத்தினால் தான் ஒரு வீட்டையே உருவாக்க முடியும். 


அதுபோலத்தான் நம் உடலின் கட்டுமான பொருள்களாக அமினோ அமிலங்கள் எனப்படும் புரதம் பயன்படுகிறது. இந்த அமினோ அமிலங்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய ஒன்றாக காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


ஏனெனில் நமது உடலில் உள்ள எலும்புகள், தசைகளில் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க புரதம் பயன்படுகிறது. மேலும் எலும்பு மூட்டுகளின் பலவீனத்தை குறைத்து வலிமை பெறவும் புரதம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.


புரதச்சத்து குறைபாடு: 




புரதச்சத்து நமது உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. இந்த ஊட்டச்சத்து குறையும்போது நமது உடல் பலவீனமாகும். தசைகள் தளர்வடையும். இது தவிர உடல் சோர்வு எடை குறைவு, முடி கொட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். புரத அளவு உடலில் குறையும்போது பல்வேறு விதமான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. இதனால்தான் நமது உடல் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது புரதச் சத்த குறித்த சோதனைகளை டாக்டர்கள் மேற்கொள்கிறார்கள்.


சரி நாம் எவ்வாறு புரதத்தை பெறலாம்..?


மட்டன், சிக்கன்,, மீன், முட்டை, இவற்றை சாப்பிட்டால் மட்டும் தான் அதிக புரதம் கிடைக்கும் என மக்கள் தவறாக எண்ணுகின்றனர்.  ஆனால் அப்படியெல்லாம் கிடையாது.. புரதச் சத்து கிடைக்க அசைவ உணவுகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது.  நாம் அன்றாட உண்ணும் சைவ உணவுகளிலும் கூட  நிறைய புரதச் சத்து உள்ளது. அது என்னென்ன உணவுகள் என்று தெரிந்து கொள்ளலாம்.


அதிகப் புரதம் நிறைந்த உணவுகள்:


1.கொண்டைக்கடலை:


கொண்டைக் கடலையில் அதிகம் புரதம் நிறைந்து காணப்படுகிறது. ஒரு கிண்ணம் வேகவைத்த கொண்டைக்கடலையில் நமது உடலுக்குத் தேவையான  நார்ச்சத்து 40%, ஃபோலேட் 70%  இரும்புச்சத்து 22% மற்றும் புரதச்சத்து 1/2 அதாவது 7.3 கிராம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.


2.பால்:


நீங்கள் தினமும் பால் குடிப்பீர்களா... அப்படீன்னா நீங்க குட் பெர்சன். பால் குடிப்பதால் நம் சருமம் பொலிவு பெற, தலை முடி எலும்புகள் போன்றவை வளர்ச்சிப் பெற உதவுகிறது. ஏனென்றால் பாலில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்பு மூட்டு வலுப்பெறுகிறது. அத்துடன் ஒரு டம்ளர் பாலில் எட்டு கிராம் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.


3.பருப்புகள்:


துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு என எந்த பருப்பாக இருந்தாலும், பருப்புகள் இல்லாமல் நாம் சமையல் செய்ய முடியாது. ஏனெனில் சமையலில் பருப்புகள் நமது நாட்டில் அத்தியாவசிய பொருளாக உள்ளது.இதில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒரு கிண்ண பருப்பில் 9 கிராம் புரதச்சத்து நிறைந்துள்ளதாம்.


4. பச்சை பட்டாணி:


பச்சை பட்டாணி குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கின்றன. பல பச்சைக் காய்கறிகளில் புரதச் சத்து குறைவாகவே காணப்படும். ஆனால் இந்த பச்சை பட்டாணியில் எட்டு கிராம் அளவு புரதம் நிறைந்து காணப்படுகிறது.


5.வெண்பூசணி விதைகள்: 


வெண்பூசணி விதைகளில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன. இந்த வெண்பூசணி விதைகளை வானொலியில் நன்றாக வறுத்து அதனை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்தப் பொடியை தினமும் பாலுடன் கலந்து பருகி வந்தால் அதிகப்படியான புரதச்சத்து நமக்கு கிடைக்கும்.


6.சிவப்பு காராமணி:


வட இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய ராஜ்மா, சிவப்பு காராமணி என அழைக்கப்படுகிறது. இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போன்றவை உள்ளன. இந்த ராஜ்மா ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி இது சுவையாகவும் இருக்கும். 


இந்த ராஜ்மாவை காரக்குழம்பு, ராஜ்மா சாதம் அல்லது சிக்கன் மட்டன் சாண்ட்வெச்களில் வேக வைத்த ராஜ்மாவை வைத்து சாப்பிடலாம்.


உடம்பு ரொம்ப முக்கியம்.. உடல் ஆரோக்கியத்திற்கு புரதச் சத்து ரொம்ப ரொம்ப முக்கியம்.. ஹெல்த்தியா சாப்பிடுங்க.. ஸ்டிராங்கா இருங்க.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்