நமது ஆசைகள் எப்படி பூர்த்தியாகின்றன? (How to manifest our deepest desires in life?)

Dec 05, 2025,09:39 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இந்தக் கேள்வி நம் எல்லோருக்கும் பொதுவானது! அனல் சிலருக்கு வாழ்க்கை எல்லாமே கொடுப்பது போலவும் சிலருக்கு இல்லாதது போலவும் தோன்றும்! இது ஏன்? வாழ்க்கை அல்லது இந்த பிரபஞ்சம் அதிர்வுகளுக்கு தான் பதில் அளிக்கிறது..


நாமும் இந்த பிரபஞ்சமும் வேற அல்ல! நாம் பிரபஞ்சத்தின் அதிர்வுக்கு ஒத்துப் போகும் போது எல்லாமே இயற்கையாகவே நடக்கும்.. நாம் இது வேண்டும் வேண்டும் என்று நினைக்கும் போது நம்மிடம் அது இல்லை என்பதால் நாம் கேட்கிறோம் எனும்போது நம்முடைய அதிர்வு மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது.. இப்போது இதையே பிரபஞ்சமும் பிரதிபலிக்கும்.. நமது அதிர்வுகளை உயர்த்தி கொள்வது மட்டுமே நமக்கு வாழ்க்கையை முழுமையாகவும் வாழ உதவும்.. இது பாசிட்டிவ் திங்கிங் அல்ல.. பாசிட்டிவ் திங்கிங் என்பது ஒரு முயற்சி.. அதிர்வுகளை உயர்த்திக் கொள்வது என்பது அப்படி அல்ல.. அது புரிதலின் மூலம் இயற்கையாக நடக்கிறது.. பிரபஞ்சத்தில் முயற்சி (Effort) என்பது இல்லை.. அது ஒரு ஒத்திசைவு (Resonance)..




உதாரணமாக ஒரு டியூனிங் ஒர்க் (Tuning fork)  எடுத்து ஒரு முறை தட்டினால் இது அதிர ஆரம்பிக்கும்.. அப்போது இன்னொரு Tuning fork ஐ பக்கத்தில் கொண்டு வந்தோம் என்றால் அதுவும் அதிர ஆரம்பிக்கும்.. இது தொடுதலினால் (Physical contact) வருவது அல்ல.. அந்த அதிர்வு ஒத்திசைந்து அதிர்கிறது.. நாம் அமைதியாக இருக்க இருக்க.. பிரபஞ்சத்தின் அதிர்வுக்கு வருவோம்.. 


இதற்கு தடையாக இருப்பது என்ன.. ? எப்போதுமே நம் தலைக்குள் பேசிக்கொண்டே இருக்கிறோம்.. பிளான் ஓடிக்கொண்டிருக்கிறது.. அது இல்லாமல் அமைதியாக இருக்க ஆரம்பிக்கும்போது.. இந்த tuning இயல்பாக நடக்கும்.. 


தானாக வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும் சரியான மனிதர்களை சந்திப்போம்.. நாம் கேட்டு வாங்குவதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையை புரிந்து கொள்வோம்.. இந்த புரிதல் மட்டுமே நம்முடைய அதிர்வை உயர்த்தும் விஷயமாக இருக்கிறது.. அந்த நிலையில் நமக்கு சந்தேகம் என்பதே கிடையாது..(There is only Trust on the Universe /Life) அப்போது நடப்பது.. புயல் போல நமக்கு எல்லாமே வழங்கப்பட்டு விடும் என்று அர்த்தம் கிடையாது.. சூரியன் வரும்போது வானம் மெதுவாக வெளிச்சம் அடைவது போல மிக அழகாக இயல்பாக வாழ்க்கை நடக்க ஆரம்பிக்கும்.. 


ஒரு சிறிய கதையை பார்ப்போம் 


காஷ்முஷ் அப்போது அமெரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்.. அவர் இலங்கைக்கு வர வேண்டிய வேலை இருந்தது அவர் கேள்விப்பட்டு இருந்தார் .. இலங்கையில் இருந்த புத்த மடத்தில், புத்த பிக்ஷுக்கள் தீயில் இறங்குவார்கள்..அவர்களுக்கு ஒன்றுமே ஆவது இல்லை என்று.. அந்த நிகழ்வை காண்பதற்காக சென்றார்..

புத்த பிக்ஷுக்கள் அதற்காக ஒரு வருடம் தயார் ஆவார்களாம்.. நான் இந்த உடல் அல்ல என்று ஒரு வருடமாக தவம் செய்வார்களாம்.. தீயில் விழும் நிகழ்வு புத்த பூர்ணிமா அன்று நடக்கும்.. நமது காஷ்முஷ் அங்கு சென்றபோது நான்கு புத்த பிக்ஷுக்கள் தீயில் இறங்கினார்கள்.. இரண்டு மணி நேரம் இருந்தபோது கூட அவர்களுக்கு ஒன்றுமே ஆகவில்லை.. இதைப் பார்த்த காஷ்முஷ்… அவர்களுக்கு புத்தரின் மேல் எவ்வளவு நம்பிக்கை என்றால் எனக்கும் ஜீசஸ் மீது நம்பிக்கை உண்டு என்று நினைத்தவாறு அவரும் தீயில் குதித்து விட்டார்.. சில வினாடிகளிலேயே அவர் கத்த ஆரம்பிக்க.. அவரை வெளியே இழுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்..


பிறகு அமெரிக்கா திரும்பினார்.. அப்போது அமெரிக்கா யூனிவர்சிட்டி ஒன்றில் இந்த புத்த பிக்ஷுக்கள் பற்றி கேள்விப்பட்டு அவர்களை யுனிவர்சிட்டிக்கு அழைத்து தீயில் இறங்குவதை செய்து காட்ட சொன்னார்கள்.. இரு புத்த பிக்ஷுக்கள் தீயில் இறங்கினர்.. அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.. அப்போது ஒரு ப்ரொபசர் மிகவும் ஆச்சரியத்துடன் அதை பார்த்துக் கொண்டிருந்தார் அவரது கண்களில் அப்போது மின்னிய நம்பிக்கையும் ஆர்வத்தையும்.. அந்த பிக்ஷுக்கள் பார்த்தபோது அவரையும் தீயில் இறங்குமாறு அழைத்தனர்.. அதற்காகவே காத்திருந்தது போல் அவரும் அவர்களுடன் ஓடிப்போனார்.. அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை.. அவர் வெளியே வந்த போது அதை பார்த்துக் கொண்டிருந்த காஷ்முஷ் உங்களுக்கு ஒன்றுமே ஆகவில்லையே நீங்கள் லாஜிக்கை நம்புபவர்.. நான் கடவுளை நம்புபவன்.. எனக்கே தீக்காயம் ஆகிவிட்டது.. உங்களுக்கு ஏன் ஒண்ணுமே ஆகவில்லை என்று கேட்க அந்த ப்ரொபசர் அந்தக் கணத்தில் புத்த பிக்சுகள் கேட்ட போது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது ‘எதைப் பற்றி’என்று இல்லை  நானே நம்பிக்கையாக மாறி இருந்தேன்.. ஒரு துளி கூட வேறு எண்ணம் எதுவும் வரவில்லை.. என்று பதில் அளித்தார்..

 

நானம் விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது அல்லது டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது ஏன் என்று கேட்பதில்லை.. வாழ்க்கை ஏன் என்ற கேள்வியில் இல்லை.. வாழ்வதில் இருக்கிறது.. நாம் தான் வாழ்க்கை என்று உணர்வதில் இருக்கிறது.. இந்த பிரபஞ்சம் நம்மை பிரதிபலிக்கிறது.. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்..


நாம் தொடர்வோம்..


(மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அமைதி வளம் வளர்ச்சி.. ஜெயலலிதா பாதையில் நடை போடுவோம்.. எடப்பாடி பழனிச்சாமி

news

நமது ஆசைகள் எப்படி பூர்த்தியாகின்றன? (How to manifest our deepest desires in life?)

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்