சென்னை: தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களுக்கான 2,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
நாட்டில் பலருக்கும் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருக்கும். இந்த நிலையில், ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் தெற்கு ரயில்வேயில் உள்ள 2,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெரம்பூரில் உள்ள கேரேஜ் ஒர்க்ஸில் 1337 பணியிடங்கள், மத்திய பணிமனை, திருச்சி பொன்மலையில் 379 பணியிடங்கள், சிக்னல் & டெலிகாம் பணிமனை, கோவை போதனூரில் 722 பணியிடங்கள் என மொத்தம் 2,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை வரவேற்கப்பட உள்ளன.
கல்வித்தகுதி என்ன..?
தெற்கு ரயில்வேயில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஐடிஐ, 10 அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 24 வயதிற்குள் உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல அனுபவம் இல்லாதவர்கள் என்றால் 22 வயதை அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}