நம்பர் 1 சுப்மன் கில்.. பாபர் ஆஸம் அவுட்.. முகம்மது சிராஜும் அசத்தல்.. ஐசிசி தரவரிசைப் பட்டியலில்!

Nov 08, 2023,03:22 PM IST
துபாய்: ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இதுவரை பேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்த பாகிஸ்தானின் பாபர் ஆஸம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல பந்து வீச்சிலும் இந்தியாவின் முகம்மது சிராஜ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில் விராட் கோலி 4வது இடத்தில் இருக்கிறார். 

நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியா அசத்தலாக ஆடி வருகிறது. இதுவரை தோல்வியே காணாத அணியாக சர்வ வல்லமையுடன் அது வலம் வருகிறது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்திய வீரர்கள் அசத்திக் கொண்டுள்ளனர். இது ஐசிசி தரவரிசையில் அவர்களுக்கு நல்ல உயர்வைக் கொடுக்க உதவியுள்ளது.



பேட்டிங் தரிவரிசையில் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் முகம்மது சிராஜ் முதலிடம் வந்துள்ளார். இதுவரை பேட்டிங்கில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் உலகக் கோப்பைத் தொடரில் அவரது மோசமான ஆட்டம் அவரை தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய 4வது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார் சுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராத் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர். 

கடைசி சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி  அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் முகம்மது சிராஜும் தரவரிசையில் முதலிடத்திற்கு எளிதாக முன்னேறி வந்து விட்டார். 

நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் இதுவரை 219 ரன்களை எடுத்துள்ளார். மறுபக்கம் பாபர் ஆஸம், 282 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் கில்லை விட 6 புள்ளிகள் குறைந்திருப்பதால் பாபர் ஆஸம் 2வது இடத்திற்கு வந்து விட்டார். கடந்த 2 வருடத்திற்கும் மேலாக பாபர் ஆஸம் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்