டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒரு விதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஷுப்மன் கில் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அப்படி என்னதான் நடந்துச்சு?

14வது ஓவரில், மார்கஸ் ஸ்டோனிஸின் பந்தை அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் LBW ஆனதாக நடுவர் அறிவித்தார். உடனடியாக கில் ரிவியூ கேட்டார். ரீப்ளேக்களில், பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால், நடுவரின் முடிவு மாற்றப்பட்டு, அவர் நாட் அவுட் ஆனார். ஆனால், அந்த பந்து டாட் பால் ஆக கணக்கிடப்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இர்பான் பதான், ஒரு வீரர் அப்பீல் செய்து, நடுவர் அவுட் கொடுத்து, பின்னர் வீரர் ரிவியூ கேட்டு, அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்றால், அது நாட் அவுட். ஆனால், பந்து பேட்டில் பட்டு சென்றாலும், அந்த ரன் இழக்கப்படுகிறது. மேலும், ரிவியூ எடுத்ததால், மீண்டும் அதே வீரர் ஸ்ட்ரைக்கில் வர வேண்டியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் முக்கியமான போட்டிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். விளையாட்டை தொடர அனுமதித்து, ரன்னை இழக்காமல் இருக்கலாம். இல்லையென்றால், ஒவ்வொரு அணியும் ரன்னை இழக்க நேரிடும். ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஒரு ரன்னில் தோற்றால், இந்த ரன் தான் காரணமாக இருக்கலாம். எனவே ICC இந்த விதியை மாற்ற வேண்டும். இது மாறாவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று இர்பான் பதான் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், ஷுப்மன் கில் தனது சமீபத்திய மோசமான ஆட்டத்திலிருந்து மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கில் அசாதாரண திறமை வாய்ந்தவர். மாற்றங்களுக்கு நேரம் எடுக்கும்... ஆனால் ஷுப்மன் ஒரு அசாதாரண திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். அவருக்கு அற்புதமான டெக்னிக் உள்ளது என்று வாட்சன் தெரிவித்தார்.
ஷுப்மன் கில் தனது முந்தைய இரண்டு ஆட்டங்களில் 5 மற்றும் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் 39 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை காப்பாவில் நடைபெறும் இறுதி T20 போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியா முயற்சிக்கும்.
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
வரைவு SOP வெளியானது.. விஜய் கூட்டத்துக்கு இனி.. ரூ. 20 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ICC தயவு செய்து முதல்ல இந்த ரூல்ஸை மாத்துங்க ப்ளீஸ்.. இர்பான் பதான் கோரிக்கை
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
{{comments.comment}}