வாழ்க்கையை கற்றுத் தரும் இடியாப்பம்ம்ம்ம்ம்!

Dec 26, 2025,11:03 AM IST

- ஆ.வ.உமாதேவி


திருத்தணி: வாகனங்களில் கொண்டு சென்று விற்கப்படும் இடியாப்பத்திற்கு உரிமம் வாங்க வேண்டும் என்ற உத்தரவு பலரையும் அதிர வைத்துள்ளது. இடியாப்பம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஒரு உணவு. குறிப்பாக எளிதாக ஜீரணமாகக் கூடியதும் கூட. அதற்கு இப்படி ஒரு சோதனையா என்று மக்கள் மலைத்துப் போயுள்ளனர்.


சரி அதை விடுங்க. இடியாப்பம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்.


இடியாப்பம் என்பது அரிசி மாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான உணவு ஆகும். இது ஆவியில் வேக வைக்கப்படுவதால், எளிதில் செரிக்கும் உணவு ஆகும். எனவே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நோயாளிகளுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவு ஆகும். இதை காலை அல்லது இரவில் காய்கறி குருமா, தேங்காய் பால், சர்க்கரை அல்லது வெல்லம், கறி குழம்புடன் சாப்பிடுவார்கள். 




இது கேரளா மற்றும் இலங்கையில் மிக பிரசித்தம் பெற்ற உணவாகும். இடியாப்பம் என்பதை இடி+அப்பம் என்று பொருள் கொண்டோமானால், இடி என்பது அழுத்துதல் அப்பம் என்றால் ரொட்டி ஆகிய தமிழ் வார்த்தைகளால் உருவானது. எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேக வைப்பதால் உடலுக்கு நல்லது. ராகி போன்ற மாவில் செய்தால் ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். குறைந்த செலவில் விரைவாக தயாரிக்கப்படும் உணவு ஆகும். 


அரிசி மாவை வெந்நீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து இடியாப்ப தட்டு அல்லது இட்லி தட்டில் வேகவைத்து எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இனிப்பு அல்லது கார வகைகளை சேர்த்து சாப்பிடலாம். 


இதை தமிழில் நூல் புட்டு, நூல் அப்பம், சந்தகை என்று வேறு பெயர்களாலும் அழைக்கலாம். ஆங்கிலத்தில். String Hoppers அல்லது Rice Noodles என்றும் அழைக்கலாம். 


இதை செய்வதற்கு குறைந்த நேரமும் குறைந்த செலவும் ஆவதால், பல பேர் இடியாப்பம் செய்து விற்பதை ஒரு தொழிலாக செய்கின்றனர். இன்றைய செய்திகளின்படி சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பவர்கள் "தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை"யிடம் உரிமம் பெற வேண்டும். உரிமத்தை கட்டணமில்லாமல் ஆன்லைனிலும் பெறலாம். ஆண்டிற்கு ஒரு முறை உரிமத்தை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டிசம்பர் 25, 2025 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. உணவின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இடியாப்பத்தை பார்க்கும் போது மிகவும் சிக்கலாக தோன்றும். ஆனால் அதை மெதுவாக பிட்டு எடுத்து பக்கத்தில் உள்ள நமக்கு பிடித்த கார வகையையோ இனிப்பு வகையையோ சேர்த்து தொட்டு சாப்பிடும் போது தான் அதன் சுவையை உணர முடியும். நம் வாழ்க்கையும் இடியாப்பத்தை போன்று சிக்கலானது தான். ஆனால் அதை கையாள வேண்டிய வகையில் கையாண்டு செயல்பட்டால் இடியாப்பத்தை உண்ணும் போது கிடைக்கும் சுவையையும் திருப்தியையும் நம் வாழ்க்கையிலும் பெறலாம் என்னும் பாடத்தை இடியாப்பம் நமக்கு கற்றுத் தருகிறது. 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?

news

அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!

news

ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!

news

டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?

news

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

news

வாழ்க்கையை கற்றுத் தரும் இடியாப்பம்ம்ம்ம்ம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 26, 2025... இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும்

news

பண்டிகைகளை முன்னிட்டு தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

அதிகம் பார்க்கும் செய்திகள்