சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைப்பனி ஏற்பட வாய்ப்புப்ள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மழைக்காலம் முடிந்து தற்போது பனிக் காலம் நடந்து வருகிறது. இது முடிந்ததும் காத்திருக்கிறது சூப்பரான வெயில் காலம். இப்போதெல்லாம் எது வந்தாலும் ரொம்பவும் உக்கிரமாகத்தான் இருக்கிறது. மழைக்காலத்தில் நாம பட்ட பாட்டை எல்லோரும் மறந்திருக்க முடியாது. எனவே இந்த வருடம் வெயில் காலமும் சிறப்பாகவே இருக்கும் என்று மக்கள் அச்சத்துடன் காத்துள்ளனர்.
அடிக்கப் போற வெயிலை நினைச்சா இப்பவே கண்ணு வேர்க்குதே என்று சொல்லாத குறையாக மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போய்க் காத்துள்ளனர்.. பரவாயில்லை மிஸ்டர் வெயில்.. நீங்க எவ்வளவு அடிச்சாலும் நாங்க நல்லாவே தாங்குவோம்.. வர்லாம் வர்லாம்!
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}