கடலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை மதுக் கடை பிரச்சினை, பல்வேறு கிராம கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியம் தெம்மூர் ஊராட்சியில் 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது . இதையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தெம்மூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து செயலர் பூவராகன், திட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரா, பணித்தள பொறுப்பாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
இதேபோல கீழ்விசிரி கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தக் கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்விசிரி கிராமம், டாக்டர் ராமதாஸின் தாய் வழி பூர்வீக கிராமமாகும்.
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
{{comments.comment}}