- சகோ. வினோத்குமார்
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் பாகுபலி என்று அழைக்கப்படும் எல் வி எம் 3 எம் 6 இந்தியா இதற்கு முன் செலுத்திய ஏவுகணைகளில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்ற சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ப்ளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 6,500 கிலோ ஆகும். இதன் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவி இஸ்ரோ சாதனைப் படைத்ததுள்ளது.
அமெரிக்காவின் ஏஎஸ்டி பேஸ்மொபைல் நிறுவனத்தின் மூலம் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் வடிவமைக்கப்படட்டதாகும். வணிக ரீதியாக இந்தியாவின் இஸ்ரோவிடம் இதனை விண்ணில் செலுத்தும் பணியை ஏஎஸ்டி நிறுவனம் ஒப்படைத்தது.
இந்த செயற்கைக்கோளின் முக்கிய பணி பூமியில் அதிகரித்துள்ள செல்போன் டவர் பயன்பாட்டை குறைப்பதற்கும், இதுமட்டுமல்லமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலமாக மொபைலுக்கு இணைய வசதியை பெறுவதற்கும் உருவாக்கப்பட்டதாகும். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களும் தங்குதடையின்றி இணைய சேவைகளை பயன்படுத்த இது உதவி புரியும்.

ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் மூலம் 6 பில்லியன் மக்கள் இணைய சேவையை எளிதாக பெற முடியும் என இஸ்ரோ ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், எல்எம்வி3 அதன் அதிக எடையை சுமந்து செல்லக்கூடியது என்ற நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் இதன் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் வணிக ரீதியாக செயற்கைக்கோளை செலுத்துவதிலும், உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் எல்எம்வி3 அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உறுதுணையாக இருக்கும்" என பதிவிட்டு இந்தியாவின் விண்வெளி வலிமையை கூறி பெருமைப்பட்டுள்ளார்.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
99% பாட்டாளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!
காதல்!
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
{{comments.comment}}