"இந்தியாவின் பெயரை மாற்றுவோம்.. வெளிநாட்டவர் சிலைகளை அகற்றுவோம்"

Sep 10, 2023,01:30 PM IST
கொல்கத்தா: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவோம்.. அதேபோல கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டுக்காரர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் என்பவர் கூறியுள்ளார்.

இந்தியா என்ற பெயரை மத்திய அரசு மாற்றப் போவதாக ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் திட்டம் இல்லை, இதெல்லாம் வெறும் வதந்தி என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால் பெயர் மாற்றம் நடைபெறுமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.



ஜி20 மாநாடு விருந்து தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழில் பாரத் என்றுதான் பெயர் இடம் பெற்றிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜி20 மாநாட்டில் பேசியபோது அவருக்கு முன்பு வை்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிலும் பாரத் என்றுதான் இருந்தது. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், ஆளுநர்கள் பலரும் கூட பாரத் என்ற பெயரைத்தான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திலீப் கோஷ் என்ற மூத்த பாஜக தலைவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவோம். கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டுக்காரர்கள் சிலைகள் எல்லாம் அகற்றப்படும்.

பாரத் என்ற பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறி விடலாம். நாங்கள் மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்ததுமே இங்குள்ள வெளிநாட்டுக்காரர்கள் சிலைகள் எல்லாமே அற்றப்படும் என்றார் அவர்.

திலீப் கோஷ் பேச்சுக்கு  மமதா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறது பாஜக. இந்தியா கூட்டணியின் எழுச்சியைப் பார்த்து பயந்து போயுள்ளது. இதனால் தான் நாட்டின் பெயரை மாற்றப் போவதாக கூறி வருகிறார்கள் என்று அக்கட்சி கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்