டெல்லி: இந்தியர்கள் கல்விக்காக செலவிடுவதை விட திருமண விசேஷங்களுக்கு அதிக அளவில் செலவிடுவதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
ஜெப்ரீஸ் என்ற முதலீட்டு வங்கி மற்றும் கேபிடல் மார்க்கெட் நிறுவனம் இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.
கல்விக்காக இந்தியர்கள் செலவிடுவதை விட கல்யாணத்திற்காக 2 மடங்கு அதிகம் செலவழிக்கிறார்களாம். கல்யாணத்தைப் பொறுத்தவரை சாப்பாட்டுக்குதான் அதிக அளவில் செலவு செய்யப்படுகிறதாம். இந்திய கல்யாணச் சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10.7 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க கல்யாணச் சந்தையை விட 2 மடங்கு அதிகமாகும்.
ஒரு இந்தியத் திருமணத்தின் சராசரி செலவு 12.5 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்று வந்து விட்டால் குறைந்தது 12.5 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவாகிறதாம். இது ஒருவர் தொடக்கப் பள்ளி முதல் பட்டப் படிப்பு வரை படிக்கும் செலவை விட 2 மடங்கு அதிகமாகும்.
அதேசமயம், இந்தியர்களை விட சீனர்கள்தான் கல்யாணத்திற்காக அதிகம் செலவழிக்கிறார்களாம். இந்தியர்களைப் பொறுத்தவரை அதிக அளவில் கல்யாணங்கள் நடைபெறுகின்றன. சீனர்களைப் பொறுத்தவரை கல்யாணங்கள் குறைவு, ஆனால் செலவு அதிகம்.
இந்தியர்களைப் பொறுத்தவரை தனி நபர் வருமானத்தை விட 5 மடங்கு அதிகமாக கல்யாணத்திற்காக செலவு செய்கிறார்களாம்.
இந்தியாவில் சொகுசு கல்யாணங்கள் அதிகரித்து வருகின்றனவாம். அதாவது ஆடம்பரத் திருமணங்கள். இதுபோன்ற திருமணங்களில் சராசரியாக 20 முதல் 30 லட்சம் வரை செலவிடுகிறார்கள். பெரும் பணக்காரர்களின் திருமணங்களில் இதை விட அதிகமாக செலவு செய்கிறார்களாம்.
திருமணங்களின்போது பெரும்பாலும் ஹோட்டல்களில் அறைகள் எடுப்பது, நல்ல சாப்பாடு, அலங்காரங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நகைகள், உடைகள், ரயில் அல்லது விமான போக்குவரத்து செலவு ஆகியவை அடக்கம். முன்பு போல இல்லாமல் இப்போது திருமண விழாக்கள் என்பது ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. அதாவது திருமணங்களை நடத்தித் தர பல்வேறு நிறுவனங்கள் வந்து விட்டன. ஏஜென்சிகள் இருக்கின்றன. ஒரு திருமணத்திற்குத் தேவையான அனைத்து பணிகளையும் இவர்கள் நடத்தித் தருகிறார்கள். கிட்டத்தட்ட ஈவன்ட் மேனேஜ்மென்ட் போல இவை மாறி விட்டன.
திருமணங்களின்போது நகை வாங்குவது என்பது கிட்டத்தட்ட மணப்பெண் சார்ந்ததாகவே அதிகம் இருக்கிறது. அதாவது வாங்கப்படும் நகையில் பாதிக்கும் மேலானவை மணப்பெண்களுக்காக வாங்கப்படுகின்றன. திருமணச் செலவில் 10 சதவீதம் ஆடைகளுக்கும், 20 சதவீதம் உணவுக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 15 சதவீதமும் செலவிடப்படுகிறது.
கல்யாணம் செஞ்சு பார்.. வீட்டைக் கட்டிப் பார் என்ற பழமொழி சும்மா சொல்லப்படவில்லை.. உண்மையிலையே இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சவால்களாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}