சென்னை: சர்வதேச பெண்களுக்கான வன்முறைகள் ஒழிப்பு தினமான இன்று பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளை எதிர்க்க சபதம் ஏற்கிறேன் என நடிகர்கள் சூர்யா- ஜோதிகா, கார்த்தி, ரேவதி உள்ளிட்ட பிரபலங்கள் உறுதி ஏற்றுள்ளனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக உலக அளவில் பெண்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகி வருகின்றனர். அதிலும் குடும்ப பிரச்சினை, பாலியல் வன்முறை, கொலை, என உலகின் ஏதாவது ஒரு மூலையில் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அப்படி பணிபுரிந்து வரும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பாலின வேறுபாடு, ஏற்றத்தாழ்வுகள், வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல காரணங்களாலும் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதனை வெளியில் சொல்ல முடியாமலும் பெண்கள் தவிர்த்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இது போன்ற அனைத்து விதமான வன்முறைகளைத் தடுப்பதற்காக தான் தேசிய அளவில் பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்புகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் இல்லாத உலகை உருவாக்குவதே இதன் இலக்காகும். அதாவது இன்று நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு, டிசம்பர் 16ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்துடன் நிறைவடைகிறது. இச்சட்டம் ஐநா சபையால் கடந்த 1979 ஆண்டு நிறைவேற்றப்பட்டு 1981 ஆம் ஆண்டு முதல் பெண்கள் முதல் சிறுமிகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகளை தடுக்க, பெண்கள் வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

அந்த வரிசையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கான அவர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து போராடக்கூடிய ஒரு அமைப்புதான் பெண் என்ற தன்னார்வலர் அமைப்பு. இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா, நடிகையும் இயக்குனருமான ரேவதி ஆகியோர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாளான இன்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளை எதிர்க்க சபதமேற்கிறேன். என் சமூகத்தில் உள்ள பெண்களுக்கு செவி கொடுத்து உரிய மரியாதையும்,ஆதரவும் அளிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். வாருங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் மதிப்பு மிக்கவராகவும் உணரும் ஓர் உலகை உருவாக்குவோம் என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}