இருதலைக் கொள்ளியாய் ஆண்கள்.. அங்கீகரிக்கப்படாத மறுபக்கம்.. ஆண்களை கொண்டாடுவோம்!

Nov 19, 2025,04:41 PM IST

- சகோ. வினோத்குமார்


ராஜபாளையம்: ஆண்கள் தினம் ஆண்டு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. டாக்டர் ஜெரோம் தீலக்சிங் என்பவர் முதன் முதலில் ஆண்கள் தினத்தை அனுசரித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோ என்ற இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இவர் பணியாற்றுகிறார். இவர் தன்னுடைய தந்தையின் நினைவாக 1999 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தார்.


2025 ஆம் ஆண்டின் கருப்பொருள் " ஆண்களையும் சிறுவர்களையும் கொண்டாடுதல் " ( Celebrating Men and Boys ) என்பது ஆகும். சர்வதேச ஆண்கள் தினத்தில்   நேர்மறையான ஆண்களின் செயல்பாடுகளை போல அனைவரும் செயல்பட உறுதி செய்தல்,  ஆண்களின் பங்களிப்பை கொண்டாடுதல், உடல்நலம் மற்றும் மனநலத்தில் கவனம் செலுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல், ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை களைதல், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் தங்கள் முழுதிறனை அடையக்கூடிய சிறந்த உலகை உருவாக்குதல் ஆறு அடிப்படை நோக்கங்களை மனதில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.


ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாட்டை தவிர்த்து இரு பாலினத்துக்கும்  சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நேர்மறையான கருத்தியலோடு அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த நூற்றாண்டில் இருந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு எதிராக பல தலைவர்கள் போராடி உள்ளனர். இந்தப் போராட்டம்  ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே ஆரம்பம் ஆகியுள்ளது. முக்கியமாக சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகளால் போராடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1829 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு அவர்களால் இதற்கான தடை சட்டம் இயற்றப்பட்டது. இவரைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு, பெரியார் போன்று தற்போது வரை பல்வேறு தலைவர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. 




சமூகத்தில் பெண்களின் பங்கு சமமாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் இன்னமும் சில இடங்களில் பெண்கள் சமூகத்தில் ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களிடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


எனினும் ஆண்களும் சமூகத்தில் பரிதாபத்துக்கு உரிய நபராக இருக்கின்றனர். அவர்களும் பலவித நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக மனரீதியான பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர். பொதுவாக தங்கள் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாத மனநிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் சமூகம் என்ற கட்டமைப்பில் ஆணிற்கு பொதுவான வரையறைகளை வரையறுத்துள்ளது. 


அதாவது தான் சார்ந்த குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை வெளியில் சொல்லக்கூடாது என்ற மறைமுக கட்டுப்பாடோடு வாழ வேண்டிய நிலையில் உள்ளான். சமூகத்தில் மட்டுமல்லாமல் சட்டத்திலும் எதிர்த்துப் போராடும் உரிமை இல்லாதவனாக உள்ள சூழல் உள்ளது. இந்த உளவியல் ரீதியான பிரச்சனையினால் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளான்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி ஊழியர் மீது பெண் தெரிவித்த பொய்யான வரதட்சணை வழக்கால் அவர் தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம். இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. இந்த நிகழ்வில் கூட ஆணுக்கு சரியான சட்ட பாதுகாப்பு இல்லாதது ஒரு முக்கியமான காரணமாகும்.


சமூக ரீதியாக பல ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் வேலை செய்யும் இடத்திலும் மற்றும் குடும்பத்திலும் ஒரே நேரத்தில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அலுவலக பிரச்சனையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அலுவலகத்தில் குடும்பப் பிரச்சனையை சொல்வதற்கான சூழ்நிலை இருக்காது. எனவே ஆண்கள் இருதலைக்கொல்லி எறும்பாக தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்த முடியாமல் தனிமையில் உள்ளுக்குள்ளே நினைத்து அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 


கடந்த சில வருடங்களாக ஆண்களின் இந்த மன வலிகளை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு உள்ளனர். சமூகத்தில் பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுதல் எந்த அளவு முக்கியமோ அதே அளவு ஆண்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக ஆண்கள் போராட வேண்டும். ஆண்களின் உணர்வுகளை பெண்கள் மதிக்க வேண்டும். இந்த இரண்டும் சம அளவில் இருக்கும் போது தான் சமூகத்தில் அமைதியான, மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.


(சகோ. வினோத்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்