துபாய்: ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளும் அணிகளிலேயே மிகப் பெரிய பணக்கார அணியாக குஜராத் டைட்டன்ஸ்தான் கலந்து கொள்கிறது. இந்த அணி ரூ. 38.15 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது.
துபாயில் இன்று ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் 333 வீரர்களை ஏலம் விடவுள்ளனர். இதில் 10 அணிகளும் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.

மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டும். 333 பேரிலிருந்து இவர்களில் யாரை எந்தெந்த அணி எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பத்து அணிகளும் கை நிறைய நிறைய பட்ஜெட்டுடன்தான் ஏலத்தில் பங்கேற்கவுள்ளன. எனவே முக்கிய வீரர்களுக்கு கிராக்கி அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணியிடம்தான் அதிக பட்ஜெட் உள்ளது. அதாவது ரூ. 38.15 கோடியைக் கையில் வைத்துள்ளது. அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 34 கோடியுடன் இருக்கிறது. அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 32.7 கோடியுடன் களத்தில் இறக்குகிறது. இவரக்ளுக்கு அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் அதிக பட்ஜெட் உள்ளது. அதாவது ரூ. 29.1 கோடி கையில் வைத்திருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் ரூ. 28.9 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 23.25, மும்பை இந்தியன்ஸ் ரூ. 17.25 கோடி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ. 13.15 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 14.5 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கவுள்ளன.
டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட சில வீரர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. அவர்களை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}