IPL auction 2024: 300க்கும் மேற்பட்ட வீரர்கள்.. ஏகப்பட்ட "சூப்பர் ஸ்டார்"கள்.. யாருக்கு யார்?

Dec 19, 2023,10:35 AM IST
துபாய்: ஐபிஎல் 2024ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று துபாயில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 333 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். இதில் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். மற்றவர்கள் இந்திய வீரர்கள் ஆவர்.

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. ரீட்டெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் பல சர்ப்ரைஸ்களை  ரசிகர்கள் பார்த்தனர். மிக முக்கியமானதாக அதில் கருதப்படுவது ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும், ஹர்டிக் பாண்ட்யா அதிரடியாக குஜராத் டைட்டன்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸுக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று ஏலம் நடைபெறவுள்ளது. இதில் இடம் பெறும் 333 பேரில் பலர் சூப்பர் ஸ்டார் வீரர்கள் ஆவர். குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஜொலித்தவர்கள் பலர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களை ஏலத்தில் எடுக்கப் போவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.



மொத்தம் உள்ள 10 ஐபிஎல் அணிகளிலும் சேர்த்து மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதில் 30 வெளிநாட்டு ரிசர்வ் வீரர்களும் அடக்கம்.

இன்று ஏலத்தில் இடம் பெறும் முக்கிய வீரர்கள் சிலர்..

ஹாரி ப்ரூக், டிராவிஸ் ஹெட், கருண் நாயர், மணீஷ் பாண்டே, ரோவ்மன் பாவல், ஸ்டீவ் ஸ்மித், ஜெரால்ட் கோட்ஸீ, பாட் கமின்ஸ், டேரில் மிட்சல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ரச்சின் ரவீந்திரா, ஷர்துள் தாக்கூர்,  கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் இங்கிலீஸ், ஜோஷ் ஹேஸல்வுட்,  மிட்சல் ஸ்டார்க்.

இதில் டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு பெரும் கிராக்கி உள்ளது. இருவரும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அசத்தியவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர் டிராவிஸ் ஹெட். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தொடர் முழுவதுமே அசத்தலாக ஆடினார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்