துபாய்: ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் மிகப் பெரிய விலைக்கு இரு பெரும் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடந்து வரும் இன்றைய ஏலத்தில் காலையிலிருந்தே பல சர்ப்பிரைஸ்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கமின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இது அனைவரையும் அதிர வைத்தது. இவ்வளவு பெரிய தொகையா என்று பலரும் வியந்து போனார்கள்.
ஆஸ்திரேலியா கேப்டனான பாட் கமின்ஸ், அனேகமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதனால்தான் பெரிய விலை கொடுத்து அவரை உள்ளே இழுத்தது சன் ரைசர்ஸ் அணி.

இந்த நிலையில் இதை மிஞ்சும் வகையில் இன்னொரு ஆஸ்திரேலிய வீரரின் ஏலம் நடந்தது. அவர்தான் மிட்சல் ஸ்டார்க். இவரை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கததா நைட் ரைடர்ஸ் அணியும் கடுமையாக மோதினர். இரு அணிகளும் மாறி மாறி விலை வைக்க நீண்ட நேரம் இந்த ஏலம் நடந்தது.
இரு அணிகளிடமும் தலா ரூ. 31 கோடி கையில் இருந்த நிலையில் இருவரும் மாறி மாறி ரேட்டை உயர்த்திக் கொண்டே போன நிலையில் கடைசியில் ஒரு வழியாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்சல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுத்தது.
ஆத்தாடி இம்புட்டு தொகையா என்று மலைத்துப் போகும் அளவுக்கு விலை போயுள்ளார் மிட்சல் ஸ்டார்க். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த அளவுக்கு யாரும் விலை போனதில்லை. அந்த சாதனையைப் படைத்துள்ளார் மிட்சல் ஸ்டார்க். பார்க்கலாம்.. எந்த அளவுக்கு இவரது ஆட்டம் இருக்கும் என்பதை.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}