- சங்கமித்திரை
சென்னை: நீயெல்லாம் சினிமாவில் நடிக்கப் போய் என்னத்த கிழிக்கப் போறேன்னு என்னோட நண்பன் ஒருத்தன் கேட்டான்.. ஆனால் இன்னிக்கு நான் நடிச்ச இறுகப் பற்றுப் படத்தை பார்க்க டிக்கெட் வாங்கி கிழித்துத போட்டுத்தான் பார்த்துள்ளான் என்று படத்தின் நாயகி அபர்ணதி சூப்பராக கூறியுள்ளார்.
ஊரெல்லாம் ஒரே பேச்சுதான்.. இறுகப்பற்று படம் பார்த்தாச்சா.. நல்லாருக்காமே.. அந்த அளவுக்கு படம் மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது. பிரமாண்டங்களுக்கு மத்தியில் இதுபோல அவ்வப்போது அழகான அமைதிப் பூக்களும் திரையுலகில் பூக்கும்.. பூக்கும்போதே அதன் மணத்தை நுகர்ந்து அனுபவித்து விட வேண்டும். அதுதான் இப்போது மக்கள் இறுகப்பற்று பக்கம் திரும்பக் காரணம்.
படம் பெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் இறுகப் பற்று குழுவினர் சச்ஸஸ் மீட் நடத்தினர். அதில் இறுகப் பற்று நாயகியரில் ஒருவரான அபர்ணதி பேசினார். அப்போது அவரது பேச்சு உருக்கமாக இருந்தது. அபர்ணதி பேச்சிலிருந்து:
இந்த படத்தில் நடித்ததற்காக முதலில் நானே எனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் பார்த்த பார்வையாளர்கள் எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னுடன் கனெக்ட் ஆகி தங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்ட என வடிவேலு சொன்னது போல என் வாழ்க்கையிலும் நடந்தது. நான் சினிமாவிற்காக முயற்சி செய்தபோது என்னுடைய தந்தையின் நண்பரின் மகன், சினிமாவிற்கு போய் நீ என்ன 'கிழிக்க' போகிறாய் என்று கேட்டான். ஆனால் இன்றைக்கு துபாயில் இந்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி 'கிழித்து' போட்டு தான் உள்ளே போய் படம் பார்த்தான்.
இப்போதுதான் சினிமாவில் வெற்றியை பார்க்கிறேன். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் நான் அழுதது நிஜமான அழுகைதான். என்னடா டைரக்டர் இப்படி போட்டு வேலை வாங்குகிறாரே என்று நினைத்ததால் வந்து அழுகை. இப்படத்தில் நடித்தது ஒரு சவாலாகவே இருந்தது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியது சந்தோஷம்.
விதார்த்தை பார்க்கும்போது மைனாவில் இருந்த அதே பவர் இதிலும் இருந்தது. விக்ரம் பிரபு இப்படத்தில் உணர்வுகளை சரியாக பேலன்ஸ் செய்திருக்கிறார். இயக்குனர் யுவராஜ், ஸ்ரீயை நன்றாக வேலை வாங்கி இருந்தார் என்றார் அபர்ணதி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா:
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது கூறியதாவது: இந்த படத்தில் நான் பாடல்கள் எழுதுவதற்கு ஜஸ்டின் பிரபாகரன் தான் காரணம். ஏற்கனவே அவருடன் இணைந்து பல படங்களில் எழுதியிருந்தாலும் இந்த படத்தில் பாடல் எழுதியது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படத்தின் காட்சிகளை பார்த்து அதற்கேற்றபடி தான் பாடல்களை எழுதினேன். அதற்கு வசதியாக பாலாஜி மணிகண்டன் தேவையான காட்சிகளை அழகாக படத்தொகுப்பு செய்து தந்தார்.
எனக்கும் இயக்குனருக்கும் ஒவ்வொரு பாடலை உருவாக்கும்போதும் ஆரோக்கியமான விவாதம் நடந்தது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் காஸ்டியூம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த படத்தில் அவரை பார்த்துவிட்டு இதுதான் நிஜமான அவரா, இல்லை டாணாக்காரன் படத்தில் பார்த்த அவர் தான் உண்மையா என்கிற ஒரு குழப்பமே எனக்கு ஏற்பட்டு விட்டது.
ஸ்ரீ, சானியா அய்யப்பன் ஜோடியினர் இன்றைய இருக்கிற இளைஞர்களை அழகாக பிரதிபலித்திருக்கின்றனர். லாப நோக்கில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் மத்தியில் நல்ல கதைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு நன்றி என்றார் அவர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}