- மைத்ரேயி நிரஞ்சனா
வாழ்க்கையைப் பற்றி நிறைய தத்துவங்கள் (Philosophy) கருத்துக்கள் உண்டு.. வாழ்க்கையில் நடப்பது உங்களின் விருப்பப்படி நடப்பதில்லை.. (I mean you don't have a personal will) என்று சொன்னால் நம்புவது கடினம்! இல்லையா?. இதுவரை நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை நடக்க இருப்பவை அனைத்துமே Perfect..
Personal Will என்று ஒன்றுமே இல்லை.. இந்த பிரபஞ்சம் விளையாடுகிறது.. நம்மை வைத்து விளையாடுகிறது என்று சொன்னால் மிகையல்ல.. (You are not playing Life but Universe/ Life is playing You) சில விஷயங்கள் நம் விருப்பப்படி நடக்கின்றன, நாம் சந்தோஷப்படுகிறோம்.. சில விஷயங்கள் நமது விருப்பத்திற்கு மாறாத நடக்கின்றன.. அப்போது துன்பப்படுகிறோம்.. இந்த விருப்பங்கள் வெறுப்புகள் இல்லாமல் போய்விடும் போது சந்தோஷமும் துக்கமும் ஒரே மாதிரி மாறி போகிறது..( This is a state of Balance)
நமக்கென்று தனியான விருப்பம் (individual will) இல்லையா? இது ஜீரணிக்க முடியாத, மிகவும் துன்பப்பட வைக்கும் விஷயமாய் முதலில் இருக்கும்.. நம்முடைய மூச்சையோ உடல் பாகங்களையோ நாம் இயக்குவதில்லை.. இந்த பிரபஞ்சத்தின் புத்திசாலித்தனம் (Intelligence) இதை இயக்குகிறது.. நாம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை எல்லாமே தன்னால் நடக்கிறது. இது எவ்வளவு பெரிய விடுதலை உணர்வு.. (A Big Relief)

நாம் என்ன வேண்டுமானால் நினைக்கலாம்.. நினைப்பது அதை நடத்திக் கொள்வது அதை பெரிய விஷயமாக்குகிறோம்..(Thoughts are like moving in the horizon and in the dream)
நம் விருப்பங்கள் வெறுப்புகள் இவை எங்கிருந்து வந்தன? நம் ஐம்புலன்களின் வழியாகத் தானே? நமது ஆழ்மனத்தில் நாம் என்ன அனுபவங்களை பெற வேண்டும் என்று விருப்பப்பட்டு இருக்கிறோமோ அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.. இதை உணரும்போது இன்னும் அதிகமாக ஆசைப்பட தோன்றுமா? இந்த வாழ்க்கை இருமை நிலை உடையது.. இரவு பகல், மகிழ்ச்சி துக்கம் இதுபோல!
நாம் மகிழ்ச்சியை உணர வேண்டும் என்றால் துன்பம் இருந்தால்தான் மகிழ்ச்சியை உணர முடியும்.. எப்படி பகல் மட்டுமே இருந்தால் இரவு தெரியாதோ அதுபோல நாம் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்பட்டால் துன்பத்தை உணர்ந்தால் மட்டுமே மகிழ்ச்சியை உணர முடியும்.. இந்த இருநிலைத் தன்மை புரிந்தால் மட்டுமே நாம் நடுநிலைத் தன்மையின் மகத்துவத்தை உணர முடியும்..!
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் ஒரு பெண்ணாக பிறந்து இருந்தார்.. அழகான பெண் அவள்.. இரவு உறங்கும் போது ஒரு கனவு வந்தது.. அந்த கனவில் ஒரு ரம்யமான பொழுது.. ஒரு அழகான சோலை அதில் இந்த பெண் அமர்ந்திருக்க.. அப்போது ஆஜானுபாகுவான ஒரு ஆண் அவளுடைய பக்கத்தில் வந்து அமர்கிறார்.. அந்த பெண்ணின் அழகை ரசித்துக் கொண்டே பக்கத்தில் வருகிறார்.. அவளுடைய முகத்திற்கு அருகே வருகிறார்.. அப்போது காஷ்முஷ் மிகவும் பயந்து நடுங்கி அய்யய்யோ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க.. அவர் சொல்கிறார்.. அம்மணி, இது உன் கனவு என்ன நடக்க வேண்டும் என்று நீ தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி சிரிக்கிறார்..
இந்த பிரபஞ்சத்தின் கனவில் நாமெல்லாம் பாத்திரங்கள (Characters).. இந்த பிரபஞ்சத்தின் கனவில் நாம் தனி கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.. இது ஒரு தூக்க நிலை.. நாம் விழித்துக் கொண்டால் ஒழிய (To awaken) பிரபஞ்சத்தின் கனவில் இருக்கிறோம் என்பதை உணர்வதற்கு இல்லை..
இதை உணரும்போது நாம் எது நடந்தாலும்.. நமக்கு தடை உணர்வு (Resistance) என்பது இல்லாமல் போகும்.. We will live in a Let Go state.. பிரபஞ்சத்தோடு ஒன்றி வாழும் நிலை.. பிரபஞ்சமாகவே வாழும் நிலை.. இது மனிதனுக்கு மட்டுமே உள்ள சாத்தியம்..
ஒரே ஒரு Choice ! நான் என்ற தனித்துவத்தை ( Which is just imagined) விட தயாராக இருக்கிறோமா? Are we ready to realise this Universal Consciousness? இதுதான் நமக்குள்ள ஒரே சாய்ஸ்..
நாம் தொடர்வோம்.
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
பசும்பொன்னில் ஒன்றாக சேரும் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன்... அடுத்து என்ன?
6 வருடங்களுக்குப் பிறகு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் face to face meeting!
அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை
உன்னை கண்டு மெய் மறந்தேன்..... உலகமே நீதான் என்றுணர்ந்தேன்!
பீகார் சட்டசபைத் தேர்தலில்.. இந்த முறையும் போட்டியிட மாட்டார்.. முதல்வர் நிதீஷ் குமார்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
{{comments.comment}}