சென்னை: நடிகை அமலா பால் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். நண்பர் ஜெகத் தேசாய் சொன்ன க்யூட்டான காதல் புரபோஸலை லிப் லாக் கொடுத்து ஏற்றுக் கொண்டார் அமலா பால்.
கேரளாவைச் சேர்ந்த நடிகையான அமலா பால், தமிழில் மைனா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ள அமலா பால், தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இயக்குநர் விஜய்யை காதலித்து மணந்த அமலா பாலுக்கு அந்த வாழ்க்கை வெகு சீக்கிரமே கசந்து போனது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பின்னர் விஜய் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அமலா பால் மட்டும் சிங்கிளாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர் ஜெகத் தேசாயை அவர் காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஜெகத் தேசாயும் அவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் இணைந்து ஒரு ஹோட்டலுக்குப் போயுள்ளனர். அங்கு சில டான்ஸர் ஆடிக் கொண்டிருப்பதை இருவரும் இணைந்து ரசிக்கிறார்கள். அந்த டான்ஸர்களுடன் இணைந்து தேசாயும் ஆடுகிறார்.

ஆடிக் கொண்டிருப்பவர் அப்படியே அமலா பாலையும் ஆட அழைக்கிறார். அவரும் எழுந்து வருகிறார். அப்போது திடீரென முட்டி போட்டு அமர்ந்து என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா.. ஐ லவ் யூ என்று கூறியபடி புரபோஸ் செய்கிறார் தேசாய்.. இதை எதிர்பார்க்காத அமலா பால் மிகவும் மகிழ்ச்சியாக அப்படியே நெருங்கி வந்து தேசாய்க்கு உதட்டில் முத்தமிட்டு எஸ் என்று சொல்லி காதலை ஏற்கிறார். பிறகு இருவரும் கட்டி அணைத்துக் கொள்கின்றனர்.
இந்த வீடியோவையும், புகைப்படத்தையும் அமலா பாலின் பிறந்த நாளன்று வெளியிட்டுள்ளார் தேசாய்.
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!
சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?
தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
Double Meaning talks: மனிதர்கள் எப்போது டபுள் மீனிங் + கெட்ட வார்த்தையில் பேச ஆரம்பிக்கிறார்கள்?
{{comments.comment}}