சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடைசி நிமிடத்தில் விலகினார். அவர் ஓய்வெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அணிக்கு தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறார் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை இந்திய அணி வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் ஏற்கனவே 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ஆஸ்திரோலியா அணி வெற்றி பெற்ற நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
முதல் டெஸ்டிற்கு பும்ரா கேப்டனாக இருந்தார். அதில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு பிறகு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். ஆனால் இதில் 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டிராவும் ஆனதால் ரோகித் சர்மா தான் காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் ஒரு பேஸ்ட்ஸ்மேனாக கடந்த 15 இன்னிங்ஸ்களில் 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 10க்கும் கீழே போய் விட்டது.
இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் ஜனவரி 03ம் தேதி துவங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துக் கொள்வதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதுவதற்கான வாய்ப்பு கிடைக்கவும் சாதமாக சூழல் உருவாகும். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித்திடமிருந்து கேப்டன் பொறுப்பை பும்ராவுக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் ரோகித் சர்மா. அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு இந்தப் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்குமாறு ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் கேட்டிருந்ததாகவும், அதை அவர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மாவிற்கு பதில் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவே கேப்டனாக செயல்படுகிறார். சுப்மன் கில், அணியில் இடம் பிடித்துள்ளார். மீண்டும் துவக்க வீரராக கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இந்திய அணி தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறது. விராத் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றி விட்டார். வெறும் 17 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில்லும் 20 ரன்களில் வெளியேறி விட்டார். தேநீர் இடைவேளை சமயத்தில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}