Bumrah 200.. டிராவிஸ் விக்கெட்டை வீழ்த்தி.. பல சாதனைகளை அள்ளிய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா!

Dec 29, 2024,05:14 PM IST

மெல்போர்ன்:  இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் நிதீஷ் குமார் ரெட்டி அதிரடி காட்டிய நிலையில் தற்போது ஜஸ்ப்ரீத் பும்ரா பந்து வீச்சில் புதிய மைல் கற்களை எட்டி அசத்தியுள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட்டை இன்று பெற்றார் பும்ரா. தனது 200வது விக்கெட்டை அவர் வீழ்த்தியபோது பல்வேறு சாதனைகளையும் சேர்த்து படைத்தார் பும்ரா.


தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில்  சிறந்த வேகப் பந்துவீச்சாளராக வலம் வருபவர்களில் முக்கியமானர் பும்ரா. இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு  கிடைத்த அபாரமான வேகப் பந்து வீச்சாளரும் கூட. தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று புதிய உச்சத்தை எட்டினார் பும்ரா.  200வது டெஸ்ட் விக்கெட்டைப் பறித்தார் பும்ரா. அவரது 200வது விக்கெட்டாக அவுட்டானவர் டிராவிஸ் ஹெட் ஆவார்.  அதைத் தொடர்ந்து மேலும் 2 விக்கெட்களையும் சாய்த்தார் பும்ரா.


மெல்போர்னில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தின்போது பும்ராவின் சாதனை வந்து சேர்ந்தது.  பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராக வலம் வருகிறார் பும்ரா என்பது நினைவிருக்கலாம். 200வது விக்கெட்டை பும்ரா வீழ்த்தியபோது பல சாதனைகளையும் சேர்த்தே படைத்தார் பும்ரா.




- இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோர் வைத்திருந்த பந்துவீச்சு சராசரியை விட சிறந்த சராசரியை வைத்துள்ளார் பும்ரா.


- பும்ராவின் பந்து வீச்சு சராசரி 19.5 ஆகும். மார்ஷல் 20.9, ஜோயல் கார்னல் 21, கர்ட்லி அம்புரோஸ் 21.


- பந்து வீச்சு சராசரி 20க்குள் வைத்து 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் டெஸ்ட் பந்து வீச்சாளர் பும்ராதான்.


- டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய 2வது இந்திய பந்து வீச்சாளர் பும்ரா. முதல் வீரராக இருப்பவர் ஆர். அஸ்வின் ஆவார். அஸ்வின் தனது 37வது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.


- ரவீந்திர ஜடேஜாவும், பும்ராவும் ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளனர். இருவருமே தங்களது 44வது டெஸ்ட் போட்டியில்தான் 200வது விக்கெட்டைப் பறித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 200 விக்கெட் வீழ்த்திய 12வது இந்திய பந்து வீச்சாளராக பும்ரா இருக்கிறார்.


- சர்வதேச அளவில் வேகமாக 200 விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 3வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா (33 டெஸ்ட்), 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மட் (36 டெஸ்ட்கள்) உள்ளனர்.


- நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை 28 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் ஜஸ்ப்ரீத் பும்ரா.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை தேர்வு செய்தது ஏன்? அமித்ஷா விளக்கம்

news

ஹைட்ரோ கார்பன் திட்டம்.. திமுகவின் துரோகங்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்: டாக்டர் அன்புமணி

news

வரும் 27,28 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவிற்கு அவரது உடல்நிலையே காரணம்.. வேறு காரணம் இல்லை: அமித்ஷா விளக்கம்!

news

கேஜிஎப் படத்தில் ஷெட்டி வேடத்தில் நடித்த.. பிரபல கன்னட நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்

news

தெரு நாய்களுக்காக.. டெல்லி முதல்வரை கத்தியால் குத்தவும் திட்டமிட்டிருந்த ராஜேஷ் சக்ரியா!

news

நிழலில்லாத நாள் - அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள்!

news

சிடி ஸ்கேன் எடுக்கச் சென்ற 22 வயதுப் பெண்ணுக்கு.. திடீர் அலர்ஜி.. அடுத்து நடந்த விபரீதம்!

news

காசி அல்வா.. நாக்குல வச்சா போதும்.. ஜிவ்வுன்னு டேஸ்ட் இறங்கும் பாருங்க.. வேற லெவல் ஸ்வீட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்