அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சாஞ்செஸ் திருமணம்.. போட்டோக்கள் வெளியாகின!

Jun 28, 2025,05:28 PM IST

நியூயார்க் : அமேசான்  நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது காதலியான லாரன் சாஞ்செஸுடன் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த பிரம்மாண்டமான திருமண விழா பிரத்தியேகமாக நடத்தப்பட்டது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சாஞ்செஸ் திருமணம் அதிகாரப்பூர்வமாக நடந்து முடிந்துள்ளது. வெனிஸில் நடந்த திருமணத்தின் முதல் புகைப்படத்தை லாரன் சாஞ்செஸ் தனது Instagram-ல் பகிர்ந்தார். ஜூன் 27, 2025 அன்று இத்தாலிய நகரமான வெனிஸில் நடந்த இந்த நட்சத்திர திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


லாரன் சாஞ்செஸ் வெள்ளை நிற லேஸ் கவுன் அணிந்திருந்தார். அமேசான்  நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒரு டக்சேடோ அணிந்து கிளாசிக் லுக்கில் இருந்தார். ஆறு வருட காதலுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது ஜெஃப் பெசோஸுக்கு இரண்டாவது திருமணம். இதற்கு முன்பு அவர் மெக்கென்சி ஸ்காட்டை 25 வருடங்கள் திருமணம் செய்து வாழ்ந்தார். லாரன் சாஞ்செஸ், முன்னாள் செய்தி தொகுப்பாளினி, அவருக்கும் இது 2வது திருமணம். இதற்கு முன்பு பேட்ரிக் வைட்செல்லை திருமணம் செய்திருந்தார்.




லாரன் சாஞ்செஸ் தனது திருமண புகைப்படத்தை பகிர்ந்தவுடன், தனது கணவரின் பெயரான பெசோஸை தனது பெயருடன் இணைத்துக்கொண்டார். அவர் தனது Instagram பக்கத்தில் பெயரை லாரன் சாஞ்செஸ் பெசோஸ் என்று மாற்றினார். Bloomberg Billionaire's Index-ன் படி, ஜெஃப் பெசோஸ் தற்போது 238 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார்.


வெனிஸில் நடந்த இந்த திருமணத்தில் பல A-லிஸ்ட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முந்தைய நாட்களில் தனி விமானங்களும், சொகுசு படகுகளும் வெனிஸ் நகரத்திற்கு வந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் வந்திருந்தார். ஓப்ரா வின்ஃப்ரே, கிம் கர்தாஷியன், கிரிஸ் ஜென்னர், கைலி மற்றும் கெண்டல் ஜென்னர், மற்றும் ஆர்லாண்டோ ப்ளூம் போன்ற பலரும் கலந்து கொண்டனர். 


இந்தியாவிலிருந்து சமூக ஆர்வலர் நடாஷா பூனவல்லா மற்றும் தொழில் முனைவோர் மோனா படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விருந்தினர்கள் தங்குவதற்காக பெசோஸ் தம்பதியினர் வெனிஸின் சிறந்த ஹோட்டல்களை புக் செய்திருந்தனர். அதில் அல்ட்ரா எக்ஸ்க்ளூசிவ் அமன் வெனிஸ் ஹோட்டலும் அடங்கும்.


லாரன் சாஞ்செஸ் அந்த புகைப்படத்திற்கு கீழ் "06/27/2025" என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் திருமணம் ஜூன் 27, 2025 அன்று நடந்தது என்பதை அவர் தெரிவித்தார். People magazine வெளியிட்ட செய்தியில், அவர்களின் திருமணம் வெனிஸில் உள்ள சான் ஜார்ஜியோ மாகியோர் தீவில் நடைபெற்றது என்று கூறப்பட்டுள்ளது. திருமண புகைப்படத்தை தவிர, லாரன் சாஞ்செஸ் தனது Instagram பக்கத்தில் இருந்த மற்ற எல்லா புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்