தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாப்பாளர் (ஆண்) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சகி என்ற பெயரில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு மையத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குடும்ப வன்முறை உள்ளிட்ட கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் இது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் சகி ஒன் ஸ்டாப் மையம் தொடங்கப்படும். இந்த மையத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புக்கு உதவி செய்யப்படும். மேலும் மன நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்த மையம் செய்கிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் துவங்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர், பல்நோக்கு உதவியாளர், மற்றும் பாதுகாவலர்(ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.
சகி ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம், மற்றும் சம்பளம், குறித்த விவரங்களை www.tenkasi.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் tenkasi.nic./forms/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், 140 /5B ஸ்ரீ சக்தி நகர், தென்காசி -627811.
இறுதி நாள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.7.2024 அன்று மாலை 5 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!
போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!
திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்
ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}