காதல் .. ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்!

Aug 13, 2026,04:24 PM IST

- கவி கலை


சுடராக மனதில் விளைந்த  

சுவடு நீ! 

சாரலாக மனதில் விழுந்த  

துளி நீ! 

கவியாக மனதில் கரைந்த  

காவியம் நீ! 

தூரம் பிரிவுக்கு மட்டுமல்ல, 

புரிதலுக்கும்  தான் , 

வாழ்க்கை வாழ மட்டுமல்ல 

வழங்குவதற்கும் தான். 

காதல் தொடுதல் மட்டுமல்ல 

தொடர்வதற்கும் தான்.




காதல், 

போதும் என்றாலும் பொங்கிடும், 

வேண்டாம் என்றாலும் வென்றிடும்  

விலகிச்சென்றாலும் விரைந்திடும் 

மறைந்திடு என்றாலும் மலர்ந்திடும், 

ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்,  

முரணாக இருந்தாலும்,  

முளைத்திடும்  .


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!

news

இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!

news

தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)

news

கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!

news

இறுதி அஞ்சலி!

news

நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்