- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
விண்ணைத் தொடும் கனவு, உன் நெஞ்சில் இருந்தால்..
விதை போல் அதுவே ,உன் எண்ணத்தில் உதிக்கும் .
விதை நெல் போல் விழுந்திடும் எண்ணமே...
விருச்சகமாய் மாறி வாழ்வை பிரகாசிக்கும்.
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை உருவாக்கும்.
நல்ல செயல்கள் நல்ல மனிதனை உருவாக்கும் .
நல்ல மனிதர்கள் நற் சமூகத்தினை உருவாக்குவர்.
நற்சமூகம் நல் உலகை உருவாக்கும்.
நல்லதோர் சிந்தனை உன் உள்ளத்தில் பிறந்தால்,
நாளை உன் வாழ்க்கை வளமாய் மாறும் .
நாளைய விதியை உன் எண்ணம் எழுதலாம்.
நல்ல எண்ணங்களையே நாளும் எண்ணுவோம்.
எண்ணத்தின் வீரியமே செயலின் தொடக்கம்.
எண்ணங்களை சீராக்கினால் ஏற்றங்கள் தேடி வரும்
எண்ணங்கள் உயர்வானால் வாழ்வும் உயர்வாகும்.
ஏற்றமிகு வாழ்வின் வாயிற்படி நல் எண்ணங்களே.
உன் எண்ணங்களே உன்வாழ்வின் ஏணிப்படி.
உன் எண்ணங்களே உனக்கு ஏற்றம் தரும் ஆயுதம்.
உள்ளத்தின் ஆழத்தில் உதிக்கும் ஒளிக்கீற்று.
உலகை உனதாக்கும் உயர்வுக்கு வழிகாட்டி.
முடியும் என்ற உறுதி உன் எண்ணத்தில் உதித்தால் ,
முழு உலகமும் உந்தன் பின் ஓடிவரும்.
நேர்மறை சிந்தனைகள் நிறைந்த நெஞ்சத்தில்,
நிச்சயம் வெற்றி குடி கொண்டிருக்கும்.
எண்ணம் போல் வாழ்க்கை.
நல்லதே நினை நல்லதே நடக்கும்.
அறிவென்று கொட்டும் முரசே!
அறிவென்று கொட்டும் முரசே ! இந்த
அகிலம் செழிக்க கொட்டு!
அனைத்து தேசத்திலும், அமைதி நிலவ கொட்டு.
அன்பே சிவமாய் எங்கும் பரவ கொட்டு.
இதுவே அறிவென்று கொட்டும் முரசே..!!
ஆணுக்குப் பெண் நிகரென ..முரசு கொட்டு.
பெண்களின் சுதந்திரம் காக்க.. முரசு கொட்டு.
பெண்களின் பாலியல் வன்கொடுமை பொசுங்க முரசு கொட்டு.
ஆணாதிக்க சமுதாயம் அடியோடு ஒழிய முரசு கொட்டு.
இதுவே அறிவென்று முரசு கொட்டு..!!
நீதி எங்கும்... நிலைத்திட வேண்டும் .
நியாயங்கள் என்றும் ... வெல்ல வேண்டும் .
பொய்மை அடியோடு... அகல வேண்டும்.
போலித்தனம் ... பொசுங்கி போக வேண்டும்.
இதுவே அறிவென்று கொட்டும் முரசே..!!
சமூக அவலங்கள் அழிந்திட வேண்டும்.
ஜாதி கொடுமைகள் அகன்றிட வேண்டும் .
ஆணவ படுகொலை வேரறுக்க பட வேண்டும் .
குழந்தை பாலியல் சீண்டல்.. சீர் செய்யப்பட வேண்டும்.
இதுவே அறிவென்று முரசு கொட்டு...!!
நல்ல எண்ணங்களே அனைத்திற்கும் மூலதனம்.
நம்பிக்கையே நம்வாழ்விற்கு நல் விதை.
கல்வியே என்றும் அறிவிற்கு வழிகாட்டி.
கபடமில்லா அன்பே மகிழ்ச்சிக்கு மாமருந்து.
இதுவே அறிவென்று கொட்டும் முரசே ..!!
உழைப்பின் உயர்வை உணர முரசு கொட்டு.
அறியாமை இருள் அகல முரசு கொட்டு.
கல்விகண் கட்டாயம் திறக்க முரசு கொட்டு.
கல்லாமை அடியோடு ஒழிய முரசு கொட்டு.
இதுவே அறிவென்று கொட்டும் முரசே..!!
மாசில்லா காற்று வெளி வேண்டும் .
மக்கா நெகிழியால் மலடாகாத மண்வளம் வேண்டும்.
மக்களின் தாகம் தீர்க்க தூய நீர் வேண்டும்.
மாசற்ற மழை நீருக்கு ,தூய விண்வெளி வேண்டும்.
நம் நம் அடுத்த தலைமுறைக்கு.... நல் உலகினை
நாம் விட்டுச் செல்ல வேண்டும்.
இதுவே அறிவென்று முரசு கொட்டு ..!!
அறிவே அனைத்துக்கும் ஆதாரம்.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?
மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!
எண்ணமே ஏற்றம் தரும்.. கலையின் கவிதை சிதறல்கள்!
மலர்களிலே அவள் மல்லிகை (சிறுகதை)
கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
{{comments.comment}}