யார் அந்த சார்?...கனிமொழி சொன்ன பதில்...இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே

Jan 04, 2025,07:12 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், யார் அந்த சார்..? என பல்வேறு எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் யார் அந்த சார் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட  சம்பவத்தை கண்டித்து  தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட ஞானவேல்ராஜா போனில் தொடர்பு கொண்டு பேசியபோது மூன்றாவது குரல் ஒலித்தது யார் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



இருப்பினும் நேற்று பாஜக மகளிர் அணி சார்பில்  குஷ்பு தலைமையில் மதுரையில் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக குஷ்பு உட்பட பாஜக நிர்வாகிகள் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்தனர். முன்னதாக இந்த பாலியல் வழக்கு தொடர்பாக நடிகை குஷ்பு திமுக ஏன் இது பற்றி பேசவில்லை. திமுக என்ன செய்கிறது என கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்த நிலையில் பாஜக சார்பில் குஷ்பு முன்வைத்த விமர்சனங்களுக்கும், பாலியல் வழக்கில் யார் அந்த சார் என எதிர் கட்சிகள் பலரும் கேள்வி எழுப்புவது குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக எம் பி கனிமொழி கூறியதாவது,  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் அறிவித்தபடியே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறகு  நான் ஏன் போராட வேண்டும்.இனி நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடக்க வேண்டும். நியாயமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை தான் கண்காணிக்க வேண்டும். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. யார் அந்த சார்? வழக்கு விசாரணையில் தெரியவரும். யார் அந்த சார் என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒருவர் இல்லாமலும் இருக்கலாம். காவல் துறை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க இதில் போராடுவதற்கு என்ன இருக்கிறது?

முதல் தகவல் அறிக்கை வெளியானது தவறு. பாஜக அரசியல் தலைவர்களே அவர்களது எக்ஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார்கள். அது மிகவும் தவறான ஒன்று. எப்ஐஆர் வெளியாவதற்கு தமிழ்நாடு அரசு காரணம் அல்ல. தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தேசிய தகவல் மையமே தெரிவித்துவிட்டது.எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கவே விரும்புகின்றனர்' என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்