பீதர்: கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது பணக்கட்டுக்கள் இருந்த பெரிய பெட்டியை 2 கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளைக்காரரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.
பீதரில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப பலத்த பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது பணப் பெட்டியை இறக்கி ஏடிஎம் மையத்தில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்தனர்.

துப்பாக்கி சகிதம் வந்திருந்த அவர்கள் மின்னல் வேகத்தில் ஊழியர்களைத் தாக்கி பணப் பெட்டியைப் பறித்தனர். அவர்களை வங்கி ஊழியர்கள் தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு வங்கி ஊழியர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கையில் கிடைத்த பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு பைக்கில் வைத்துக் கொண்டு இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.
தூக்க முடியாமல் அந்தப் பெட்டியை வண்டியில் அவர்கள் வைத்துக் கொண்டு தப்பிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு எதிரேதான் எஸ்பிஐ வங்கியின் தலைமை கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் துணிச்சலுடன், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இப்படி துணிகரமாக கொள்ளையர்கள் நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொள்ளையர்களை பொதுமக்கள் தரப்பில் சிலர் தடுக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முடியாமல் போனது.
இரு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே.. பார்த்தனின் பார்த்தசாரதியே.. புருஷோத்தமனே!
அமாவாசை அன்று அவள் என் செய்வாள்?
அதலக்காய் பாத்திருக்கீங்களா?.. இப்ப சீசன்.. விட்ராதீங்க.. வாங்கி சாப்பிடுங்க.. சூப்பர் ஹெல்த்தி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!
நூறு சாமி படப்பிடிப்பு.. கள்ளக்குறிச்சி சுற்று வட்டாரத்தில் கேம்ப் அடிக்கும் விஜய் ஆண்டனி!
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}