திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 : மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Nov 09, 2024,10:29 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 04.30 மணியளவில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு 35 லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டிய முக்கிய அறிவிப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.




திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்


* கார்த்திகை தீபத் திருவிழா அன்று காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காண கோவிலுக்கு உள்ளே சென்று தரிசிக்க 7500 பேருக்கும், மாலையில் மலை மீண்டும் ஏற்றப்படும் மகா தீபத்தை கோவிலில் இருந்து தரிசிக்க 11,500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.


* திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் ஏற்றப்படும் போது 2000 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். அதுவும் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு தான் அனுமதி சீட்டு வழங்கப்படும்.


* கட்டளைதாரர்கள், உபதாரர்கள் அனுமதியை பொறுத்தவரை 5200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8000 பேருக்கு மகாதீபத்தை காணவும் அனுமதி வழங்கப்படும்.


* இது தவிர பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1100 பேருக்கும் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படும்.


* கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக நெய் காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் கோவிலில் அதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களுக்கு சென்று அளிக்கலாம். அல்லது அதற்குரிய காணிக்கையையும் செலுத்தலாம்.


* ஆன்லைன் வழியாக நெய் காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் 1 கிலோ நெய்க்கு ரூ.250ம், அரை கிலோ நெய்க்கு ரூ.150ம், கால் கிலோ நெய்க்கு ரூ.80ம் கட்டணம் செலுத்தலாம்.


* திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும்.


* கோவிலுக்குள்ளேயே 3 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.


* பக்தர்களின் பாதுகாப்பிற்காக 4500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 


* திருத்தேர் வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தின் போது பாதுகாப்பு கருதி நான்கு மாட வீதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்