சென்னை: என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான நபர்களுக்கு இன்று ஒரு பெரிய நாள் என்று நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் சூரிக்கும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படங்கள் இன்று ரீலிஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்றவர்கள் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் நவ்வி ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கும் இத்திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வாழை திரைப்படம் மாரி செல்வராஜின் இளம் வயதில் தான் பட்ட கஷ்டங்களையும், சோகத்தையும் எதார்த்தகமாக வெளிபடுத்தியிருக்கிறது. இப்படம் பார்த்த அனைரவரையும் கண்கலங்க வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

கொட்டுக்காளி படமும் இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடித்துள்ள படம். நடிகர் சூரி இப்படத்தில் ஹீரோவாக அசத்தியுள்ளார். சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாது. இயற்கைதான் இசை. இந்த படத்தை சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் கணேஷ் சிவா தொகுத்துள்ளார். இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு ரசிகர்களிடையே கிடைத்துள்ளது.
இந்த இரு படங்களும் வெளியானதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான நபர்களுக்கு இன்று ஒரு பெரிய நாள். “வாழை” படத்திற்காக மாரி செல்வராஜ் சார் அவர்களுக்கும், “கொட்டுக்காளி” படத்திற்காக சூரி அண்ணனுக்கும் பிரம்மாண்ட வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
சூரியுடன் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். அதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
நிலையாமை!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
எங்கே என் .. யாதுமானவன்?
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
{{comments.comment}}