திருவனந்தபுரம் : கேரளாவில் தீவிர வறுமை இல்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தின் பிறப்பு தினமான 'கேரளப் பிறவி'யை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான UDF, இந்த அறிவிப்பை "முழுப் பொய்யானது" என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்தது.
சட்டசபை கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதிசன், முதல்வர் விதி 300-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பு "முழுப் பொய்யானது" என்றும், அவை விதிகளை "அவமதிப்பதாகவும்" கூறினார். "எனவே, நாங்கள் இதில் பங்கேற்க முடியாது, கூட்டத்தை முழுமையாகப் புறக்கணிக்கிறோம்" என்று சதிசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் "இது ஒரு மோசடி", "இது வெட்கக்கேடானது" என்று கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர், எதிர்க்கட்சியினர் "மோசடி" என்று குறிப்பிடுவது அவர்களின் சொந்த நடத்தையைப் பற்றித்தான் என்று கூறினார். "நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் சொல்கிறோம். நாங்கள் சொன்னதைச் செயல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு எங்கள் பதில்" என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் இந்தியாவிலேயே முற்றிலுமாக வறுமை இல்லாத முதல் மாநிலம் என கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 01ம் தேதி முதல் கேரளா வறுமை இல்லாத முதல் மாநிலம் என அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இது தற்போது கேரள அரசியலில் புதிய விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}