நெல்லை: கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அம்மாநிலத்தில் இருந்து 7 பேர் கொண்ட குழு இன்று மாலை திருநெல்வேலி வருகிறது.
கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருநெல்வேலி ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு இன்று மாலைக்குள் நெல்லை வருகிறது. இந்த குழு நடுகல்லூர் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யும். அதன்பின்னர் திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயனையும் சந்தித்து குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு
"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்
Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!
சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!
அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!
மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026
கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!
{{comments.comment}}