டெல்லி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து இன்று செய்தியாளர்களுக்கு விவரித்த ராணுவ மற்றும் விமானப்படை பெண் அதிகாரிகளின் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதல் குறித்து ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த இரு பெண் அதிகாரிகளும் நாட்டு மக்களின் அன்பையும், பாசத்தையும், மரியாதையையும் ஒரே நாளில் பெற்று விட்டனர். கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் படைக்கு தலைமை தாங்கிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். 2016-ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவப் பயிற்சியான 'எக்சர்சைஸ் ஃபோர்ஸ் 18'-இல் இந்திய அணியை அவர் வழிநடத்தினார்.

தாக்குதல் பற்றி கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், ராணுவக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கோட்லியில் அமைந்துள்ள குல்பூர் பயங்கரவாத முகாம் மீது இந்திய ஆயுதப் படைகள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த முகாமில்தான், ஏப்ரல் 20, 2023 அன்று பூஞ்சில் நடந்த தாக்குதல், ஜூன் 9, 2024 அன்று யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீதான தாக்குதல் ஆகிய தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT)வில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றார் அவர்.
விங் கமாண்டர் வியோம்கா சிங் ஒரு பொறியாளர். அவர் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணிபுரிகிறார். டிசம்பர் 18, 2019 அன்று பறக்கும் பிரிவில் நிரந்தர ஆணையை பெற்றார். இதுவரைக்கும் அவர் 2,500 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்துள்ளார். பல மீட்புப் பணிகளில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
தாக்குதல் பற்றி விங் கமாண்டர் வியோம்கா சிங் கூறுகையில், கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் பரவியிருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை இராணுவம் வெற்றிகரமாக குறிவைத்து அழித்தது.
பொதுமக்களுக்கும், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதையும் தவிர்க்க தீவிரவாதக் குழுக்களின் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. பாகிஸ்தானின் எந்தவொரு எதிர்வினையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றார்.
தொடர்ந்து 2வது நாளாக அமித்ஷாவை சந்தித்த வேலுமணி...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்
ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!
ஐபிஎல் ஒளிபரப்பிற்கு வங்கதேச அரசு அதிரடித் தடை
தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் ஆட்சியை பிடிப்போம்...அமித்ஷா நம்பிக்கை
ஓய்வூதிய திட்டம்...போர்கொடி உயர்த்தும் போக்குவரத்து தொழிலாளர்கள்
2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடல்
2025ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 12 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு
{{comments.comment}}