கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. மரண தண்டனை கோரி சிபிஐ அப்பீல்.. விசாரணைக்கு ஏற்பு

Feb 07, 2025,04:53 PM IST

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கோரி சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது கொல்கத்தா உயர்நீதிமன்றம்.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது.  பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.




மறுபுறம் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவுப்படி, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து  வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று  சியால்டா சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 


குற்றவாளி சஞ்சய்ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது நீதிமன்றம். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்தாருக்கு மேற்கு வங்க அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று தெரிவித்தது. இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என மரண தண்டனை விதிக்கப்படாததற்கு என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இந்தத் தீர்ப்பு பெண் மருத்துவர் குடும்பத்தை கடுமையாக அதிருப்தி அடையச் செய்தது. கோர்ட் அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க மாட்டோம் என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறியிருந்தனர். 


மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியும் இந்தத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக்கூறி இந்த வழக்கை விசாரித்த  சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம், மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள் மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்