- க.சுமதி
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்ப வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்களுக்கான பல்வேறு தேவைகளை கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியைச் சார்ந்த ஊத்தங்கரை வட்டார மக்கள் தங்கள் எம் பியும், நாடாளுமன்றத்தில் தங்களது கோரிக்கைகள் குரித்து குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சரி ஊத்தங்கரை மக்களுக்கு அப்படி என்னதான் கோரிக்கைகள் உள்ளன.. வாங்க பார்ப்போம்..

ஊத்தங்கரையில் ஆர்டிஓ ஆபீஸ் இல்லை. இதனால் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் வாங்கும் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக 50 கிலோமீட்டர் தூரம் சென்று கிருஷ்ணகிரி ஆர்டிஓ ஆபீஸில் பதிவு செய்ய வேண்டி உள்ளது.
எனவே ஊத்தங்கரையில் ஆர்டிஓ ஆபீஸ் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
ஊத்தங்கரை அருகில் எம்ஜிஆர் நகரில் நூற்பாலை கூலி தொழிலாளர்களுக்கு 1980 களில் வீட்டு மனைக்காக அரசு நிலம் மானியமாக தரப்பட்டது. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2008ல் தற்காலிக பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை நிரந்தரப்பட்டா கொடுக்கப்படவில்லை. தொகுதி எம் பி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி எங்களுக்கு பட்டா வாங்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊத்தங்கரை சிப்காட் பகுதியில் வேலைக்குச் செல்லும் நேரங்களில் வாகனநெரிசல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு எங்காவது செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் இங்கு போக்குவரத்து காவலர் மற்றும் போக்குவரத்து வழிகாட்டி தடங்களை அமைத்து தர வேண்டும்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மனையில் போதுமான நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் அவசர பிரிவு நோயாளிகள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000ஏக்கர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இதற்கு நீர் ஆதாரமாக உள்ளது, அனுமந்தம் தீர்த்தம் வழியாக செல்லக்கூடிய பாம்பாறு ஆகும். ஆறு இருந்தும் பயனில்லாமல் உள்ளது வேதனைக்குரிய விஷயம். மழைக்காலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. கோடைகாலங்களில் ஆற்றில் நீர் இல்லாததால் குடிநீருகக்கே மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பாம்பாற்றில் தடுப்பணைகள் கட்டி தந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீர் உயரும். கொடைகாலங்களிலும் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். எனவே தடுப்பணைகள் கட்டுவது குறித்து நாடாளுமன்றத்தில் எம்பி அவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}