மகளிர் ஆணைய உறுப்பினரானதால்.. லோக்சபா தேர்தலில் குஷ்பு போட்டியிட முடியாது!

Feb 28, 2023,09:32 AM IST
சென்னை: பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகியுள்ளார். இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன.



நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கருணாநிதி தலைவராக இருந்தபோது அவர் திமுகவில் முக்கியப் பிரமுகராக வலம் வந்தார். கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் முன்னிலை பெற்றார். ஆனால் கட்சியில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கத் தொடங்கியதும் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். 

இதையடுத்து அப்செட் ஆன குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சித் தலைவராக இருந்தபோது குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவரும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் அதன் பின்னர் இளங்கோவனின் தலைவர் பதவி பறிக்கப்பட்டதும் குஷ்புவும் கட்சியில் ஓரம் கட்டப்பட்டார்.




இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார் குஷ்பு. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் சீட் தரப்பட்டது. ஆனால் அத்தொகுதியில் திமுகவிடம் தோல்வியுற்றார் குஷ்பு. உண்மையில் அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியைத்தான் கேட்டிருந்தார்.  ஆனால் அந்தத் தொகுதியைத் தராமல் ஆயிரம் விளக்கு தொகுதியை பாஜக ஒதுக்கியது சலசலப்ப ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  2024 லோக்சபா தேர்தலில் குஷ்பு நிச்சயம் போட்டியிடுவார். குறிப்பாக கொங்கு மண்டலத் தொகுதி ஒன்றில் அவர் போட்டியிடலாம் என்ற பேச்சு சமீப நாட்களாக அடிபட்டு வந்தது. சட்டசபைத் தேர்தலில் கைநழுவிப் போன வெற்றியை, லோக்சபா தேர்தலில்  குஷ்பு பெறுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளது  பாஜக மத்திய அரசு. 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியின் ஆயுள் காலம் 3 வருடமாகும். எனவே  குஷ்புவால் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.  இது குஷ்புவின் ஆதரவாளர்களை அப்செட்டாக்கியுள்ளது. குஷ்பு எம்.பியாகி டெல்லி செல்வார்.. வாய்ப்பிருந்தால் மத்திய அமைச்சராகவும் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள், இப்போது பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்