காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?

Jan 17, 2026,11:04 AM IST

- ப.நா. ராஜேஷ் கண்ணா


காணும் பொங்கல் என்பது தமிழ் பொங்கல் பண்டிகையின் நான்காவது மற்றும் இறுதி நாளாகும். இது பொதுவாக ஜனவரி 16 அல்லது 17 அன்று தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது."காணும்" என்ற சொல் "காணுதல்" அல்லது "பார்த்தல்" என்று பொருள்படும்.


காணும் பொங்கல் என்பது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெரியவர்களை காண்பது, அவர்களிடம் ஆசி பெறுவதற்கான நாள். இது கன்னி பொங்கல் அல்லது கனுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது, குறிப்பாக அதன்போது திருமணமாகாத பெண்கள் தங்கள் நலனுக்காக வழிபாடு செய்கின்றனர்.


இந்நாள் குடும்பங்கள் பிக்னிக், ஆற்றங்கரை சுற்றுலா, கோயில் பயணம் செய்து மகிழ்ச்சியுடன் செலவழிக்கின்றனர். சகோதரிகள் சகோதரர்களின் நலனுக்காக கணுப்பிடி (நோன்பு) வைப்பதும், விளையாட்டுகள் போன்ற உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்றவையும் நடைபெறும்.




தமிழ் கலாச்சாரத்தில் உறவு-உறவு இணைப்புகளை வலுப்படுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. இது பண்டைய தமிழ் சமூகத்தில் அறுவடைக்குப் பின் குடும்பங்கள் ஒன்றுகூடி பெரியவர்களிடம் ஆசி பெறுவதற்கும், நெடுநாள் காணாத உறவினர்களை சந்திப்பதற்கும் தொடங்கியது.


பொங்கல் விழா சங்க காலத்திலிருந்தே (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெறுமனே வீட்டிலேயே அமர்ந்திருக்கலாம், ஜாலியாக வெளியில் செல்லுங்கள். உற்றார் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து மனசு விட்டு நாலு வார்த்தை பேசி விட்டு வாருங்கள்.. உற்சாகமும் கூடும், உறவும், நட்பும் பலப்படும்.


(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!

news

கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!

news

வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே .. உலகில் ஒற்றுமை தழைக்கவே!!!

news

காணும் பொங்கல் மட்டுமல்ல.. இவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய தினம் இன்று!

news

பொங்கல் சீர் வரிசை!

news

காக்காப்பிடி கணுப்பிடி.. உடன் பிறந்தாரின் நன்மைக்காக இருக்கும் நோன்பு!

news

தலைவர் 173 ஷூட்டிங்...சூப்பர் ஸ்டார் ரஜினியே பகிர்ந்த மாஸ் அப்டேட்

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்