பத்து மிளகு இருந்தா போதும்.. பகைவன் வீட்டிலும் விருந்து சாப்பிடலாம்.. அவ்வளவு பவர் பாஸ்!

May 22, 2024,01:03 PM IST

- சந்தனகுமாரி


ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் குறுமிளகு என்று கூறப்படும் கருப்பு மிளகு. உலகம் முழுவதும்  சமைப்பதற்கும், உணவுகளை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  இயற்கையாகவே நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இந்த குறுமிளகு முக்கிய பங்கு வகக்கின்றது. இது பூத்து ,காய்த்து வளரும் கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். தென்னிந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது குறிப்பாக கேரளாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.


எங்கள் ஊரில் நாங்கள் நல்ல மிளகு என்று தான் சொல்லுவோம். சமையல்னு எடுத்துக்கிட்டா மிளகு இல்லாத சமையல் பார்க்க முடியாது. பொங்கல்ல தொடங்கி ரசம் வரைக்கும் எல்லாமே மிளகு தான் யூஸ் பண்றாங்க. அது மட்டுமா ஒரு கசாயம் வைக்கணும்னாலும் முதல்ல தேடற பொருள் மிளகு தான். ஏன் சொல்றம்னா மிளகு மனித உடல் ஆரோக்கியத்துக்கு அந்த அளவுக்கு உதவுகிறது. சின்ன வயசுல இருந்தே அம்மா வீட்டுல வெண்பொங்கல் வைத்து தருவாங்க.  அப்ப எல்லாம் அம்மா பொங்கல் வச்சு தந்த உடனே படபடன்னு அதுல கிடக்கிற மிளகு எல்லாம் எடுத்து தட்டு ஓரமா வச்சுட்டு தான் சாப்பிடுவோம். ஆனா இப்ப தோணுது சின்ன வயசுல அந்த மிளகெல்லாம் நம்ம மிஸ் பண்ணிட்டோம்.. சாப்பிட்டு இருந்து இருக்கணும் அப்படின்னு ஃபீல் பண்றோம். அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது மிளகு.




மிளகில் இருக்கும் காரத்தன்மை உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கும் உணவில் ருசியை ஏற்படுத்தவும் உதவுகிறது. அந்த காலத்துல 10 மிளகு இருந்தா பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் அப்படின்னு என்ன சும்மாவா சொன்னாங்க. ஆமாங்க அந்த அளவுக்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி மிளகுக்கு உண்டு. நாம் சாப்பிடும் போது ஏதாவது விஷ சக்திகள் இருந்தால் அதை உடனடியாக மிளகு போக்குகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடல் உஷ்ணத்தை போக்கவும், எப்பவும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் மிளகு உதவுகிறது. மேலும் பசியின்மை, மந்தம், பித்தம் போன்றவற்றிற்கும் மிளகு சரியான மருந்தாக விளங்குகிறது. 


அது மட்டும் இல்லை. பல் வலி ,வாய் துர்நாற்றம், ஈறுகளில் பிரச்சனை போன்றவற்றிற்கும் மிளகு தூள் சேர்த்து பல் விளக்கும் போது துர்நாற்றம் அனைத்தும் நீங்கி பல் வெண்மையாக காணப்படும். அது மட்டும் இல்லை. தலைவலி காய்ச்சல் வந்துட்டா முதலில் மிளகு வைத்து கசாயம் வைத்து குடிக்க வேண்டும். குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி எளிதில் குணமடையும்.


மிளகில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம் ,இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் தையமின், நியாசின் முதலிய உயிர் சத்துக்களும் உள்ளன.  உடல் சூட்டினால் வரக்கூடிய இருமலுக்கு  மிளகை நன்கு பொடி செய்து அதில் சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடும் போது உடனடியாக சரியாகும். பூச்சிக்கடிகளினால் உடலில் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்க பத்து மிளகு ,ஒரு வெற்றிலை ,அருகம்புல் சிறிதளவு எடுத்து இது கொதிக்க வைத்து தினமும் குடிக்கும்போது சரியாகும்.


நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் மிளகு ரசம் வைத்து சாப்பிட வேண்டும் அப்போது ஈசியாக செரிமானம் ஆகும். சுவாச பிரச்சனையும் சரியாகும். மிளகு பொடியை தேன் கலந்து சாப்பிடும் போது சோம்பேறித்தனம் நீங்கும். கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பதால் தலையில் பொடுகு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவ்வாரு இருப்பவர்கள் தினந்தோறும் இரண்டு மிளகு உன்பதன் மூலம் அந்த தொல்லையிலிருந்து விடுபடலாம்.


மேலும் நெஞ்சு சளி அதிகம் இருப்பவர்கள் சூடான பாலில் சிறிதளவு மிளகுத்தூள் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கும் பொழுது சளி இறங்கி விடும். அது மட்டுமா தோல் சுருக்கம், சருமத்தில் ஏற்படும் நிற மாற்றம், முதுமை தோற்றம் போன்றவற்றை சரி செய்து இயற்கையான அழகுடன் நம்மை பொலிவடைய செய்கிறது.


குறிப்பாக அசைவ உணவுகளில் மிளகு சேர்க்க காரணம் விஷத்தன்மையை போக்குவதற்காகவும் எளிதில் ஜீரணம் அடையவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றார்கள். இன்றைய காலகட்டத்தில்  மிளகின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. குறிப்பாக சொல்ல போனால் ஒரு முட்டை எடுத்து ஆஃப் பாயில் போட்டால் கூட இரண்டு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடும் போது அதனுடைய ருசி அப்படி இருக்கும். மிளகு மருத்துவ குணங்கள் மட்டுமின்றி ருசிக்காகவும் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் அதனுடைய பயன்களும் ருசியும், அதிக அளவு இருக்கின்றது. நாமும் மிளகு அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வோம். இயற்கையான முறையில் ஆரோக்கியமாக இருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்