நித்தியக் கல்யாணி என்றால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு பூவின் பெயராக தான் தெரியும்.. பெயர் என்னவோ புதுசுதான்.. ஆனா் பூ பழசு தான். இந்த செடியின் மகத்துவம் தெரியாமலேயே பலர் தங்கள் வீட்டில் வைத்து அழகுக்காக வளர்த்து வருகின்றனர். இச்செடியின் இலைகள் கசப்பாக இருப்பதனால் இதனை ஆடு மாடுகள் உட்கொள்வதில்லை. இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். இதன் பூ, இலைகள், தண்டு மற்றும் வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கின்றது.
குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு இந்த நித்தியகல்யாணி கை கொடுக்கும் மருந்தாக பயன்படுகிறது. எப்பேர்பட்ட சர்க்கரை வியாதியாக இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. ஏன் என்றால் இந்த நித்தியகல்யாணிஜூஸைக் குடித்தால் போதும் சூப்பராக குணமாகும்.

நித்தியகல்யாணி செடியின் பூவைப் பறித்து அதனை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் அதனை ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். நான்கு நாட்கள் இதை சாப்பிடுவது நல்லது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இந்த பூ கட்டுக்குள் கொண்டு வருகிறது. குறிப்பாக நாள்பட்ட சர்க்கரை காரணமாக மோசமான பின்விளைவுகளை எதிர் கொண்டிருப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். இது நம் உடலில் இன்சுலின் உற்பத்தியை பெருக்குகிறது.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு கொலஸ்ட்ரால் அளவு மிக, மிக அதிகமாக இருக்கும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் நம் இதயம் பலமாகிறது. இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இல்லைங்க, இரத்த அழுத்தம், மனரீதியான நோய்கள், மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் போன்ற அனைத்திற்கு இது மருந்தாக பயன்படுகிறது.
அதுமட்டுமா.. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இச்செடி பயன்படுத்தப்படுகிறதாம். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக இது பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை அளவு குறைந்து நோய் கட்டுக்குள் வரும்.
Disclaimer: நாட்டு மருந்து வைத்தியம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
{{comments.comment}}