சென்னை : எதை செய்வதாக இருந்தாலும் அதற்கென்று சரியான நேரம் என்று ஒன்று உள்ளது. அந்த நேரத்தில் செய்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். சாப்பிடுவது, தூங்குவது, வாக்கிங் செல்வது என அனைத்தையுமே அதற்கான சரியான நேரத்தில் செய்தால் மட்டும் அதன் முழு பலனையும் நம்மால் பெற முடியும். அப்படி தான் உடல் எடை சரி பார்ப்பதும் கூட.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டு, அதை சரியான அளவில் வைத்திருப்பது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் எது என்று தான் பலருக்கும் தெரிவது கிடையாது. இன்னும் சிலர் எப்போது எல்லாம் தோன்றிதோ அப்போது எல்லாம் உடல் எடையை சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் உடல் எடையை எப்போது செக் செய்தால் சரியாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர்களின் அறிவுரையின் படி, காலை நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம் ஆகும். காலையில் எழுந்ததும் உங்களின் குடல் தன்னுடைய வேலையை துவங்குவதற்கு முன்பான நேரம் தான் உடல் எடையை சரி பார்க்க சரியான நேரம். அதாவது, எதுவும் சாப்பிடுதற்கோ அல்லது குடிப்பதற்கோ முன்பு பார்த்தது தான் சரியாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பார்க்கும் போது தான் உங்களின் சரியான உடல் எடையை கணக்கிட முடியும்.
உணவு, தண்ணீர் ஏதும் சாப்பிடாமல் இருக்கும் போது உங்கள் உடல் எடையில் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரே சீராக, துல்லியமாக இருக்கும். முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்துக் கொண்டே, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் உடல் எடையை சரிபார்த்துக் கொண்டே வந்தால் உடல் எடையின் அளவு குறித்த சரியான அளவீட்டை பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}