சென்னை: சென்னையில் நாளையும் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வட தமிழ்நாட்டில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை பனிப்பொழிவு குறைந்தது பிற்பகலுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டியும் இருக்கக் கூடும்.

மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இன்றும், நாளையும் வறண்ட வானிலை யே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிப்பொழிவு காணப்படும்.
16 ஆம் தேதி
தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
17.2.2025 முதல் 20.2.2025 வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
நியூ இயர் ஸ்வீட்ஸ் சாப்பிடலாம் வாங்க.. காதலரை வரவழைத்து.. பெண் செய்த விபரீதம்!
என் இனிய வருடமே 2025!
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
மார்கழி திருவாதிரை நாளில் நடராசரின் தாண்டவம்!
2026 வருடமே வருக!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?.. அமைச்சர்கள் - அரசு ஊழியர் சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை
வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் (Life Is a Celebration)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
{{comments.comment}}