சென்னை: பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஐ(Life Insurance Kompany)திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து, தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே இளைஞர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பிடித்தமான லைப் ஸ்டைல், கொண்டாட்டம், படிப்பு, இவை எல்லாம் மையப்படுத்தி உருவாகி வருவதால் இளைஞர் பட்டாளத்தை தன்வசப்படுத்தி வருகிறார். இதனால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. மேலும் இவரின் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து எல்.ஐ.கே படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி கதா நாயகியாக நடித்துள்ளார்.எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இதனை அடுத்து சென்னையில் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே எல்ஐகே திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஐகே திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, LIK(life insurance kompany) திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரகசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படம் dude . மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில் Dude’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது நினைவிருக்கலாம்.
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!
120 கிலோ எடையிலிருந்து ஸ்லிம் பாடிக்கு மாறிய விஜய் சேதுபதி மகன்.. காரணம் இதுதானாம்!
அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?
{{comments.comment}}