Loksabha Elections 2024: திமுகவிடம் எந்த தொகுதிப் பட்டியலையும் தரவில்லை.. காங்கிரஸ் மறுப்பு

Jan 28, 2024,06:08 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி உத்தேசமாக 21 தொகுதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை தற்போது காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.


தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கியுள்ளன. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுக, முதல் கட்சியாக காங்கிரஸை அழைத்து இன்று பேசியுள்ளது. 


மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழுவும், டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக  குழுவும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டன. அவை - திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகியவை.  இதில் தேனி தொகுதியில்  மட்டும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.




இந்த நிலையில் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதற்குக் காரணம், தென் மாநிலங்களில் தங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால், அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக சீட்களை அள்ள காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. எனவே தமிழ்நாட்டிலும் இரட்டை இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.


ஏற்கனவே போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் மேலும் 12 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கான உத்தேசப் பட்டியலையும்  காங்கிரஸ் குழு, திமுக குழுவிடம் தரவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

கன்னியாகுமரி,  ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (தனி), தென் சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகியவையே அவை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.


காங்கிரஸ் கட்சி மறுப்பு




இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில்,  2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுக்க விரும்புகிறோம் என்று அக்கட்சி சார்பில் ஆர். கோபண்ணா மறுப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்